X
आता खरेदी करा
मलेरियाची लक्षणे व उपचारांची माहिती
Know About Diseases January 4, 2018

மலேரியா

மலேரியா என்றால் என்ன?

மலேரியா என்பது பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியால் உருவாகி அனோபிலஸ் கொசுவால் பரப்பப்படும் ஒரு கொசு தொற்று நோயாகும். 2015ல், மலேரியா காரணமாக 214 மில்லியன் நிகழ்வுகளும் 438,000 இறப்புகளும் நிகழ்ந்தன.

 

மலேரியாவின் அறிகுறிகள் என்ன?

இது உயர் காய்ச்சல் மற்றும் குளிருடன் தொடங்கும் காய்ச்சல் போன்ற நோயாகும். மற்ற அறிகுறிகளில் வாந்தி மற்றும் குமட்டல், தலைவலி, உடல்வலி, வலிமை குறைவு மற்றும் சோர்வு போன்றவை அடங்கும்.

 

மலேரியாவிற்கான சிகிச்சைகள் என்ன? ஏதேனும் தடுப்பு மருந்துகள் உள்ளனவா?

மலேரியாவிற்கான சிகிச்சை, பரிந்துரைக்கப்பட்ட மலேரிய எதிர்ப்பு மருந்துகள், முதன்மையாக ஆர்ட்டிமிசினின் ஒருங்கிணைவு சிகிச்சை (ACT) பயன்பாட்டை உள்ளடக்கியது. மருந்தின் அளவு மற்றும் வகையானது, வயது, மலேரியா வகை கருவுற்ற பெண்மனி நேர்வுகள் போன்ற பல காரணிகளைச் சார்ந்தது. ஒருவர் மலேரிய போன்ற அறிகுறிகளை உணர்ந்தால் தயவுசெய்து மருத்துவருடன் ஆலோசிக்கவும்.

இன்று மலேரியாவுக்கு எதிராக வணிகரீதியில் கிடைக்கும் எந்த தடுப்புமருந்துகளும் இல்லை. பல தடுப்பு மருந்து போட்டியாளர்கள் தற்போது உலகம் முழுவதும் ஆய்வு மற்றும் மேம்படுத்தலில் இருக்கும் அதே வேளையில், ஒருவர் கொசுக்கடி மற்றும் மலேரியாவைத் தடுக்க போதுமான முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்வதைத் தொடர வேண்டும்.

 

ஒருவர் தனக்கு மலேரியா இருப்பதைக் கண்டுபிடிப்பது எப்படி/ மலேரியாவைக் கண்டறிவதற்கு உள்ள சோதனைகள் என்ன?

மலேரியாவை உடனடியாக விரைவு கண்டறிதல் சோதனை (RDT) அல்லது நுண்ணோக்கி ஆய்வின் (ஆய்வக இரத்தப் பரிசோதனை)  மூலம் கண்டறிய முடியும். இதில் மலேரிய ஒட்டுண்ணி இருப்பைத் தீர்மானிக்க நோயாளியின் இரத்தத் துளியை ஆய்வு செய்வதும் அடங்கும். RDTகள் பெரும்பாலும் களத்தில் ASHA பணியாளர்கள் மற்றும் முதன்மை உடல்நல மையங்களால் பயனுறு மலேரிய நிகழ்வு மேலாண்மைக்கு, குறிப்பாக போதுமான உடல்நல சேவைகள் வரம்பிடப்பட்ட அடைவதற்கு கடினமான பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன. நியூக்ளிக் அமில உருப்பெருக்கம் அடிப்படையிலான சோதனையும் மலேரியா பரவலாக இல்லாத பகுதிகளில் மலேரியாவைக் கண்டறிவதற்காக உள்ளது.

 

மலேரியாவை தடுப்பது எப்படி?

மலேரியா அனோபிலஸ் கொசுவால் பரப்பப்படுகிறது. வீட்டிற்குள்ளேயும் வெளியேயும் இந்த கொசுக்களிலிருந்து பாதுகாப்பது முக்கியமானது ஏனென்றால் ஒரு ஒற்றை கொசுக்கடியும் மலேரியாவுக்கு வழிவகுக்கலாம். வெளியே செல்லும் முன், குட்நைட் பேப்ரிக் ரோல் ஆன் (அல்லது குட்நைட் கூல் ஜெல்/பேட்சஸ் போன்றவை) போன்ற தனிப்பட்ட விரட்டிகளைப் பயன்படுத்துவது கொசுக்கடிகளைத் தடுக்கலாம். வீட்டில் இருக்கும் போது, மாலைநேரத்தில் கதவுகள் மற்றும் சன்னல்களை மூடுவது, மற்றும் வீட்டு நிலை விரட்டிகளான குட்நைட் ஆக்டிவ்+ மற்றும் குட்நைட் பாஸ்ட் கார்டு போன்றவற்றைப் பகலிலும் பயன்படுத்துவது கொசுக்களை விரட்டும். கூடுதல் பாதுகாப்பிற்காக மக்கள் கொசுவலையின் கீழ் படுக்கவும் வேண்டும்.

 

ஒருவர் மலேரியா குறித்த விவரங்களை எங்கு பெறுவது?

உலக சுகாதார நிறுவனம் (WHO), நோய் கட்டுப்பாடு மையங்கள்( CDC), மற்றும் இந்திய தேசிய ஓம்புயிரி தொற்று நோய் கட்டுப்பாட்டு திட்டம் (NVBDCP)  ஆகியவற்றின் வலைத்தளங்கள் மலேரியா, அதன் அறிகுறிகள், மற்றும் சிகிச்சை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்கும்.

ஒருவர் உயர்காய்ச்சல் மற்றும் குளிர் கொண்டிருந்தால் தயவுசெய்து உள்ளூர் மருத்துவர், மருத்துவ கிளினிக் அல்லது மருந்துவக் கவனிப்பு வழங்குநர்களை ஆலோசிக்கவும்.

Related Articles

डेंग्यूपासून आपल्या मुलांचे संरक्षण करा – 5 आवश्यक गोष्टी

Read More

मुलांमधिल डेंग्यू ताप – बचाव, लक्षणे आणि उपचार

Read More
सिट्रोनेला तेल, नीलगिरी तेल - 100% नैसर्गिक डांस विकर्षक

नैसर्गिक मॉस्किटो रिपेलंट ना समजून घेणे – सिट्रोनेला आणि नीलगिरी तेल

Read More

मॉस्किटो रिपेलंटस च्या दंतकथांची पोलखोल!

Read More

भारतात मॉनसून पावसा बरोबर मलेरिया आणि डेंग्यू वाढत आहेत

Read More

मलेरियाची चिन्हे जाणून घ्या आणि रात्रीच्या वेळी हत्याकांडापासून स्वतःला वाचवा!

Read More

Find The Right Repellent

Find Your Protector