குழந்தைகள் எப்போதும் கொசுக்களை ஈர்ப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு கொசுக்கடிக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது. தன் குழந்தையின் உடம்பில் சிவப்புத் தழும்புகளையும் சிரங்குகளையும் பார்ப்பதற்கு ஒரு அம்மா மிகவும் வருத்தப்படுவாள். குழந்தைகளுக்கு வலிக்கிறது என்று சொல்லத் தெரியாது. அதனால்தான் ஒவ்வொரு அம்மாவிற்கும் குழந்தைகளுக்கு கொசுக்கடி உட்பட எந்த பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க வேண்டுமே என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள்.
நாம் குழந்தைகளுக்கான கொசு விரட்டிகள் பற்றி பேசும்போது, நமது குழந்தைக்கு பாதுகாப்பான மற்றும் அதே சமயம் ஆற்றல் மிக்க கொசு விரட்டியை தேர்வு செய்வது பற்றி தயக்கம் ஏற்படுகிறது. வீட்டில் பெரியவர்களிடத்தில் நீங்கள் கேட்டால், அவர்கள் இயற்கையான கொசு விரட்டியைத்தான் பயன்படுத்த சொல்வார்கள். அதாவது எலுமிச்சையுடன் லவங்கம், டீட்ரீ ஆயிலில் யீஸ்ட் எக்ஸ்ட்ராக்ட்ஸை சேர்ப்பது போன்றவை. இருந்தாலும் இவை எல்லாம் பாதுகாப்பான மற்றும் ஆற்றல் மிக்க கொசு விரட்டிகள் என்பதற்கு முடிவான ஆதாரம் எதுவும் இல்லை. அப்படியென்றால் இதற்கு தீர்வுதான் என்ன?
குழந்தைகளுக்காக குட்நைட் வழங்கும் பலவிதமான கொசு விரட்டிகளின் ரேஞ்ஜ்.
குட்நைட் பலவிதமான தீர்வுகளை வழங்குகிறது. இவை குழந்தைகளுக்காக ஆற்றல் மிக்க கொசு விரட்டிகள் மட்டுமின்றி, குழந்தைகளின் நாசூக்கான சருமத்திற்கு பாதுகாப்பாகவும் இருக்கின்றன. குட்நைட் பேட்சஸ் இதற்காக மிக பிரமாதமான தேர்வாக இருக்கிறது. இதில் சிட்ரொனெல்லா மற்றும் யூகலிப்டஸ் போன்ற தூய்மையான இயற்கை எண்ணெய்கள் உள்ளன. இவற்றை குழந்தைகளின் உடைகளில் போட்டால் மட்டுமே போதும். எனவே மேற்புற உடலில் ஒரு பேட்சும், கீழ்புற உடலில் ஒரு பேட்சும் போட்டால் போதும். இது 8 மண்இ நேரத்திற்கு எல்லா வகையான கொசுக்களிடமிருந்தும் உங்கள் குழந்தையை பாதுக்காக்கும். இதில் டெங்கு, மலேரியா மற்றும் சிக்கன்குனியாவைப் பரப்பும் கொசுவகைகளும் அடங்கும். மிகச் சிறிய பச்சிளம் குழந்தைகளுக்கும் இந்த பேட்சஸ்களை கிரிப்ஸ், ப்ராம்ஸ் மற்றும் ஸ்டோலர்களில் போடலாம்.
குழந்தைகளுக்காக மற்றும் மொரு ஆற்றல் மிக்க மற்றும் பாதுகாப்பான கொசுவிரட்டி குட்நைட் கூல் ஜெல். இது பிசுபிசுப்பு இல்லாதது. இதில் ஆலோ வேராவின் நற்குணம் உள்ளது. மேலும் குழந்தை நல மருத்துவர்கள் சான்றுரைத்த இனிமையான நறுமணத்துடனும் வருகிறது. குட்நைட் கூல் ஜெல்லை உங்கள் குழந்தையின் வெளியில் தெரியும் சருமத்தில் போடலாம். அதாவது கைகள், கால்கள், கழுத்து முகம் போன்றவை. ஆனால் இதை கண்கள், உதடுகள், வாய் மற்றும் வெட்டுக்கள் அல்லது காயத்தின் மீது போடாமல் தவிர்க்க வேண்டும்.
குட்நைட் பேச்சஸ் மற்றும் குட்நைட் கூல் ஜெல் போன்றவை பொதுவாக சிறு குழந்தைகளை வெளியில் கூட்டிச்செல்லும்போது பயன்படுகிறது. அதே சமயம் குட்நைட் ஆக்டிவ்+சிஸ்டம் உங்கள் அன்பிற்குரியவர்களை வீட்டிற்குள் கொசுக் கடியிலிருந்து பாதுகாக்கும். எத்தனை எண்ணிக்கையில் கொசுக்கள் இருக்கின்றன என்பதைப் பொறுத்து நீங்கள் இதை பயன்படுத்தலாம். குறைவான எண்ணிக்கையில் கொசுக்கள் இருந்தால் நார்மல் மோடை ஸ்விட்ச் ஆன் செய்து கொள்ளலாம். அதிக எண்ணிக்கையில் கொசுக்கல் இருந்தால் ஆக்டிவ் மோடை ஸ்விட்ச் ஆன் செய்யலாம். இதன் இதமான நறுமணம் உங்கள் குழந்தையின் மூக்கிற்கு எரிச்சலூட்டாது. எனவே உங்கள் குழந்தை இரவில் நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க முடியும்.