கடந்த சில ஆண்டுகளாக, கொசுக்கடியால் பரவும் நோய்கள் கணிசமான அளவு அதிகரித்துவிட்டது. பல லட்சக்கணக்கானவர்கள் இதனால் பாதிக்கப்படுள்ளனர். டெங்கு, மலேரியா மற்றும் ஜிகா வைரஸ் தொற்றினால் பலர் உயரிழந்துள்ளனர். இதில் மிகப் பொதுவான ஒன்று டெங்கு ஏற்கனவே பல உயிர்களை பலி வாங்கிவிட்டது. டெங்குவிற்கு முதலில் அறிகுறி எதுவும் தெரியாது, அதிலும் குறிப்பாக குழந்தைகளிடையே. நான்கு நாட்களுக்குப் பிறகு நோயைக் கண்டறியும் தருணத்தில், குழந்தை எவ்வளவு இளசாக இருக்கிறதோ அறிகுறிகள் அவ்வளவு தீவிரமாக இருக்கும்.
இதோ குழந்தைகளிடையே டெங்கு அறிகுறிகள் பட்டியல். இதை நீஙக்ள் கவனிக்க வேண்டும்:
ஃப்ளூ போன்ற நோய்: உங்கள் குழந்தைக்கு அதிக காய்ச்சல், மூக்கு ஒழுகல் மற்றும் இருமல் இருந்தால் இவை டெங்கு அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம். இந்த அறிகுறிகள் வழக்கமான ஃப்ளூவின் அறிகுறிகள் போல இருந்தாலும், காய்ச்சல் கண்ட 24 மணி நேரத்திற்குள் உங்கள் குழந்தை நல மருத்துவரைக் காண வேண்டும். மேலும் டெங்கு இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறியும் பரிசோதனையையும் செய்ய வேண்டும்.
நடத்தையில் மாற்றம்: பெரியவர்களுடன் ஒப்பிடுகையில், தமக்கு என்ன நடக்கிறது என்று குழந்தைகளுக்குத் தெரியாது. இதனால் அவர்களுக்கு எரிச்சலும், குழப்பமும் ஏற்படும். ஏனென்றால் அவர்களுக்கு அதற்கான காரணம் தெரியாது. அவர்கள் பிடிவாதம் பிடிபார்கள். பெரும்பாலும் பசியின்மை ஏற்படும்.
உடல் பாதிப்பு: டெங்குவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தீவிர மூட்டு வலி, முதுகு வலி மற்றும் தலைவலி போன்றவை ஏற்படும். உங்கள் குழந்தைகளிடம் பெசி அவர்களுக்கு என்ன வேதனை என்பதை புரிந்து கொண்டு மருத்துவரிடம் சொல்லவும்.
குடல் பிரச்சினைகள்: அவர்களுக்கு குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும். இதை கேஸ்ட்ரோயென்ட்ரைடிஸ் என்று தவறாக கருத நேரிடலாம். அவர்களுக்கு அடிவயிற்றிலும் வலி ஏற்படக்கூடும்.
சருமப் பிரச்சினைகள்: குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மிகப் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று சருமத்தில் ரேஷ்கள் தோன்றுதல், இது தட்டம்மை போல திட்டுக்களாக காணப்படும். மற்றுமொரு அறிகுறி தொடர்ந்து அரிப்பு.
ரத்தக் கசிவு: பிளேட்லெட் எண்ணிக்கை குறைவதால், குழந்தைகளுக்கு ஈறுகள் மற்றும் மூக்கில் இரத்தக் கசிவு ஏற்படும். இதற்கு உடனடி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மிக அரிதான நிலைகளில் இது உயிருக்கு ஆபத்தாக இருக்கும், அதாவது ஹேமரேஜிக் காய்ச்சல் அல்லௌ ஷாக் சின்ட்ரோம் போன்றவை ஏற்படும்.
உங்கள் குழந்தைக்கு இவ்வாறான அறிகுறிகள் தென்பட்தால் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:
உங்கள் குழந்தை டெங்குவினால் பாதிக்கப்படாமல் தவிர்க்க, பின் வரும் முன்னெச்சரிக்கைகளை நீங்கள் கையாளலாம்:
இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவுகிறது. எனவே பெரும்பாலும் டெங்கு பரவுகிறது. உங்கள் குழைந்தைக்க்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், இந்த கட்டுறையில் சொல்லப்பட்ட நடைமுறைகளை மேற்கொள்ளுங்கள். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் நோய்த் தொற்று ஏற்படாமல் தவிர்க்க முடியும். என்ன நீங்களும் அப்படிதானே நினைக்கிறீர்கள்?