குழந்தைகள் வீட்டிற்குள் இருப்பதைத் தவிர்ப்பதற்காக குறும்புகள் செய்வார்கள். ஆனால் எப்போதும் வெளியில் சென்று விளையாடுவது என்பது முடியாத காரியம். அதிலும் குறிப்பாக மழை பெய்யும்போது அல்லது வெளியில் இருட்டாக இருக்கும்போது. இந்த மாதிரியான நிலைமைகளில், வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டுக்கள் உள்ளன.
வீட்டிற்குள் விளையாடுவதற்கு, தாயக் கட்டம் அல்லது பரம பதம் போன்றவற்றைத் தவிர, இனும் 10 விளையாட்டுக்கள் உள்ளன. இவை உங்கள் குழந்தைகளை ( பக்கத்து வீட்டுக்காரர்களையும்) மகிழ்ச்சியுடன் வைக்கும்.
1. ஸ்பை:
இது குழந்தைகளுக்கு மிகச் சிறந்த விளையாட்டு. இதன் மூலம் அவர்கள் எழுத்துக்களைப் பயன்படுத்தி வார்த்தைகள் அமைக்க கற்றுக் கொள்வார்கள். மேலும் அவற்றைப் பற்றிய விஷயங்களையும் தெரிந்து கொள்வார்கள். குழந்தைகளின் பார்வைக்கு நன்கு தென்பதும் பொருள்களை எடுங்கள். இந்த விளையாட்டு மகிழ்ச்சியாகவும், கற்பதாகவும் இருக்கும்.
2. கண்ணாமூச்சி
பெரிய வீட்டில் வசிக்கும் குழந்தைகளுக்கு கண்ணா மூச்சி அதிக மகிழ்ச்சி அளிக்கும். குழந்தைகளுக்கு ஒளித்து கண்டுபிடிக்கும் விளையாட்டு பரவசமூட்டும். அடுத்த முறை உங்கள் குழந்தைக்கு காய்கறி சாப்பிடக் கொடுக்கும் போது, அவர்கள் என்ன மறைக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்துவிட முடியும்.
3. சைமன் சொல்கிறான்:
சைமன் சொல்கிறான் எனப்து சிறந்த கவனத்தையும் விழிப்புணர்வு எச்சரிக்கையும், உடனடி பதில் சொல்லு திறனையும் கொண்ட விளையாட்டு. யார் சைமனாக இருக்கிறார்களோ அவர்கள் சைமன் சொல்கிறான் என்று ஆரம்பிக்க வேண்டும். அவனது ஆணையை பின்பற்றத் தவறுபவர்களுக்கு அல்லது தவறாக செயல்படுத்துபவர்கள்ள் அவுடாகி விடுவார்கள்.
4. இசை நாற்காலி
இது ஒரு ஜாலியான பார்ட்டி விளையாட்டு ஆகும். இதை மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடும்போது அதன் சந்தோஷமே அலாதி.
5. ஸ்கேவேஞ்சர் ஹன்ட்:
ஸ்கேவேஞ்ஜர் ஹன்ட் என்பது வெவ்வேறு இடத்தில் மறைமுகமாக வைக்கப்பட்டுள்ள குறிப்புகளை வைத்து விளையாடும் ஆட்டம் ஆகும். இதில் மறைமுகமான இடங்கள் அதிகம் இருக்கும். இது வீட்டிற்குள் விளையாடுவதற்கு மிகவும் மகிழ்ச்சியானது. எளிமையான மகிழ்ச்சிகனமான குறிப்புகளைகொடுத்து கடைசியில் புதையலை கண்டுபிடிக்க வைத்தல் ஆகும்.
6. ஷராட்ஸ்
ஷராட்ஸ் என்பது வீட்டிற்குள் விளையாடுவதற்கான பழங்கால விளையாட்டு ஆகும். இதை பெரியவர்களும் குழந்தைகளும் விளையாடி மகிழ்வார்கள். இதில் ஒருவர் ஒரு புத்தகத்தின் பெயரை அல்லது படத்தின் பெயரை சைகை மூலம் விளக்க வேண்டும். அதை வைத்து மற்றவர் அதன் பெயரை கண்டுபிடிக்க வேண்டும். இது இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடலாம். மிக மகிழ்ச்சிகரமான விளையாட்டு ஆகும்.
7. ஸ்க்ராபிள்/போகிள்:
ஸ்க்ராபிள்/போகிள் என்பது வார்த்தையை அமைக்கும் விளையாட்டு ஆகும். நீங்கள் கண்டுபிடிக்கும் வார்த்தைகள் மற்றும் வார்த்தகைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மதிப்பெண் கிடைக்கும். இது உங்கள் குழந்தையின் மொழித் திறன் வளர உதவும். இது போட்டி என்பதால் அவர்கள் புதிய வார்த்தைகளை கற்றுக் கொள்வார்கள்.
8. பிக்ஷனரி:
காகிதத்தில் வரைந்து அந்த வார்த்தகையைக் கண்டு பிடிக்க வேண்டும். எவ்வளவு விரைவாக சொல்கிறீர்களோ அவ்வளவு பாயிண்டுகள் கிடைக்கும். எந்த டீம் அதிக பாயிண்டுகளை எடுக்கிறதோ அந்த டீம் வெல்லும். பலருக்கு வரையும் திறன் இல்லாததால் இந்த விளையாட்டு இன்னும் சுவாரசியமாக இருக்கிறது.
9. 20 கேள்விகள்:
ஒரு புகழ்பெற்ற நபர்/புத்தகம்/படத்தை (தீர்மானித்துள்ளபடி) நினைத்துக் கொள்ள சொல்லவும். அது பற்றி 20 கேள்விகளைக் கேட்கவும். கேள்விகளுக்கு ஆம் இல்லை என்று பதில் சொல்ல வேண்டும். நீங்கல் பதில் பற்றிய நேரடி தகவல்களைக் கேட்கக்கூடாது.
10. யூனோ:
இது குடும்பத்திற்கு மிகவும் விருப்பமான விளையாட்டு ஆகும். இதில் நீங்கள் மிக கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டு. இது மழை பெய்யும் காலத்தில் மிகவும் சுவாரசியமான விளையாட்டு.
இப்போது வீட்டில் இருக்கும்போது குழந்தைகளுடன் என்ன விளையாட்டு விளையாட வேண்டும் என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள். அதே நேரம் எல்லாருடைய பாதுகாப்பிற்காகவும் முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக மழைக்கால மாலை நேரங்களில் கொசுக்களும் மற்றும் பல பறக்கும் பூச்சிகளும் வரும். ஏனெஅவே வீட்டில் கொசுக்கள் வராமல் தடுத்து குழந்தைகளை அபாயகரமான கொசுக்கடியிலிருந்து பாதுகாக்க வேண்டும். நாங்கள் குட்நைட் பவர் ஆக்டிவ்+ வேப்பரைசர் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். இதன் மூலம் இந்த பூச்சிகள் உங்களைப் பாதுகாக்க வேண்டும். உங்கள் மகிழ்ச்சியை கெடுக்காமல் இருக்கும். மாலை நேரத்தை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள்!