கொசுக்களிடமிருந்து பாதுகாப்புப் பெறுவது என்பது டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்ற மிக கொடிய நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவது ஆகும். இந்த நோய்கள் மிக அதிகமாக்க் காணப்படுவதால், இவற்றைப் பற்றிய (சரியான மற்றும் தவறான)விவரங்கள் எல்லா இடங்களிலும் பரவி இருக்கின்றன.
உண்மைகள் நமது உயிரைப் பாதுகாக்க உதவும். தவறான தகவல்கள் உங்கள் குடும்பத்தை பாதுகாக்கத் தவறிவிடும். இதன் மூலம் முழுமையாக தடுக்கப்படக்கூடிய நோய்களுக்கு ஆளாக வைக்கும்.
இதில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட முக்கியமான தகவல் கொசு விரட்டிகளைப் பற்றியது – இவை கொசுக் கடியை ஆற்றலுடன் தடுக்கின்றன மற்றும் கொசுவால் பரவும் நோய்களையும் தடுக்கின்றன. இவ்வாறு கொசு விரட்டிகள் பற்றிய தவறான தகவல்களை நம்ப வேண்டாம். இவை உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடாக அமையும்.
தவறான கருத்து 1: ஏசி ஓடும்போது கொசு விரட்டிகள் தேவை இல்லை.
உண்மை : கொசுக்களுக்கு வெப்பமான மற்றும் ஈரப்பதம் உள்ள சூழல் பிடிக்கும். எனவே வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதன் மூலம் அவற்றை தடுக்க முடியும். ஆனால் அவற்றை முழுமையாக செய்லபடாமல் வைப்பதற்கு, உங்களுக்கு 50 டிகிரி ஃபாரன் ஹீட்டிற்கும் (10 டிகிரி செல்ஷியஸிற்கும்) குறைவான வெப்ப நிலை தேவை. வெப்ப நிலை கொசுக்களின் செயல்பாட்டை பாதிக்கிறது. குளிர்ச்சியாக இருக்கும்போது கொசுக்கள் குறைவாக இருந்தாலும் கூட அவை உங்களை கடிக்கலாம்.
எனவே ஏசி ஓடும்போதுகூட, அது எந்த நேரமாக இருந்தாலும் சரி, கொசு விரட்டி பயன்படுத்துவது சிறந்தது.
தவறான கருத்து 2: கொசுக்கள் இரவில்தான் கடிக்கின்றன
உண்மை: இந்த தகவல் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். இந்தியாவே எதிர்த்துப் போராட்டிக் கொண்டிருக்கும் டெங்கு மற்றும் சிக்கன்குனியா என்ற இரண்டு கொடிய நோய்களைப் பரப்பும் ஏடெஸ் எஜிப்டி என்ற வகை கொசுக்கள் பகல் நேரத்தில்தான் கடிக்கின்றன! ஏடெஸ் எஜிப்டி என்பது பகல் வெளிச்சத்தில்தான் மிக சுறுசுறுப்பாக இயங்குகிறது. அதுவும் குறிப்பாக சூரியன் உதயமான முதல் இரண்டு மணி நேரத்திற்கு மற்றும் சூரியன் அஸ்தமிக்கும் பல மணி நேரம் முன்பு.
தவறான கருத்து 3: கொசு விரட்டிக்ளை வீட்டிற்குள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்.
உண்மை: டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்றவற்றை ஏற்படுத்தும் இந்த கொசுக்கள் பகலில்தான் வேட்டையாடுகின்றன. எனவே பகல் நேரத்தில் வீட்டிற்கு வெளியில் செல்லும் உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு எவ்வாறு பாதுகாப்புத் தருவது என்று நீங்கள் கவலைப் படுகிறீர்கள். அதாவது பள்ளிகள், அலுவலகங்கள், விளையாட்டு மைதானங்கள், ஷாப்பிங் சென்டர்கள, தெருக்கள் – உங்களை எந்த இடத்திலும் கொசு கடிக்கலாம். கொசு விரட்டிகளை வீட்டிற்குள்தான் பயன்படுத்த வேண்டும் என்பது தவறான கருத்து! நீங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போதெல்லாம் உங்களுக்கான கொசு விரட்டியை பயன்படுத்த வேண்டும்.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குட்நைட் ஃபேப்ரிக் ரோல்–ஆனை நீங்கள் பயன்படுத்தலாம். இது 100% இயற்கை எண்ணெய்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. இது கொசுக்களிடமிருந்து 8 மணி நேரப் பாதுகாப்புத் தருகிறது. நீங்கள் இதை உங்கள் உடைகளில் நான்கு புள்ளிகளாக வைத்தால் மட்டும்போதும். உங்கள் உடைகளில் கறை ஏற்படுத்தாத குட்நைட் ஃபேப்ரிக் ரோல்–ஆன் உங்களை கொசுக்களிடமிருந்து 8 மணி நேரத்திற்கு பாதுகாக்கிறது.
தவறான கருத்து 4: கொசுக்கள் 15 முதல் 20 அடிக்கும் அதிக உயரத்தில் பறாக்காது. எனவே நான் உயரமான கட்டிடத்தில் இருப்பதால் நான் பாதுகாப்பாக இருக்கிறேன்.
உண்மை: உயரமான கட்டிடங்களில் கொசுத் தொல்லை இல்லையா? இருக்கிறது. இந்த கொசுக்களுக்கு உயரமாகப் பறப்பதற்கு தடை எதுவும் இல்லை. கொசுக்கள் தரைக்கு 50 அடி உயரத்தில் உள்ள மரப் பொந்துகளில்கூட இனப் பெருக்கம் செய்கின்ரன. உயரமான பெரிய கட்டிடங்களிலும்கூட அவை உயிர் வாழ்கின்றன. எனவே சிக்கன்குனியா மற்றும் டெங்கு போன்ற நோய்களை தடுக்க உங்கள் வீட்டில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதை தடுக்க வேண்டும். மேலும் கொசுக் கடியை தடுக்க கொசு விரட்டி பயன்படுத்த வேண்டும்.
எனவே நீங்கள் உயரமான கட்டிடங்களில் வசித்தாலும்கூட உங்கள் வீட்டில் கொசு விரட்டிகளை பயன்படுத்துங்கள். அதாவது குட்நைட் ஆக்டிவ்+ போன்ற லிக்விட் வேப்பரைசர் மெஷின்கள் குட்நைட் ஆக்டிவ்+லோ ஸ்மோக் காயில்ஸ் போன்ற சுருள்கள் அல்லது குட்நைட் ஃபாஸ்ட் கார்டு போன்ற காகிதங்கள்.
தவறான கருத்து 4: கொசுக்கள் அழுக்கான தண்ணீரில் மட்டும்தான் இனப்பெருக்கம் செய்யும் எனவே தேங்கி இருக்கும் சுத்தமான தண்ணீர் ஒரு பிரச்சினை இல்லை.
உண்மை: ஏடெஸ் எஜிப்டி என்பது மனிதர்கள் வசிப்பிடத்தை சுற்றி இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்டது. இது சுத்தமான தண்ணீரிலும் இனப்பெருக்கம் செய்யும். உண்மையில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய சிறிதளவு தண்ணீரே போதுமானது – ஒரு தேக்கரண்டி அளவு தண்ணீரே அவை முட்டையிடப் போதுமானது. ஏடெஸ் எஜிப்டி வகை பெண் கொசு திறந்த கொள்கலனிலும் முடையிடும் – அதாவது பூத்தொட்டி, வாளி, பறவை தண்ணீர் பாத்திரம், பயன்படுத்தப்படாத நாயின் உணவுத் தட்டு அல்லது பீர் பாட்தில். எனவே சுத்தமான அல்லது அசுத்தமான தண்ணீரை தேங்க விடாதீர்கள்.
இந்த கட்டுறை முதலில் வெளியான இணையதளம் www.thehealthsite.com