டெங்கு மற்றும் சிக்கன்குனியா, இரண்டுமே வைரல் நோய்கள் ஆகும். இவை ஏடெஸ் கொசுக்களின் கடியால் பரப்பவுகின்றன. வரலாறுரீதியாக பார்த்தால், சிக்கன்குனியா நோய் முன்னர் டெங்கு என்று அடையாளம் காணப்பட்டது. ஆனால் தன்சானியாவிற்கு அருகிலுள்ள மகோண்டே பீடபூமியில் சிக்கன்குனியா நோய் பரவியபோதுதான் அது தனியான ஒரு நோய் என்று அறியப்பட்டது.
டெங்கு மற்றும் சிக்கன்குனியா, இரண்டுமே ‘ஏடெஸ் என்ற கொசுக்களால் பரவும் நோய்கள் ஆகும். பெரும்பாலும் ஏடெஸ் ஏஜிப்டி என்ற வகை கொசுவினால் டெங்குவும், ஏடெஸ் அல்போபிக்டஸ் என்ற வகை கொசுவால் பெரும்பாலும் கசிக்கன்குனியா வைரஸ் பரவுகிறது. இருந்தாலும்கூட இரண்டு வகை கொசுக்களுமே இரண்டு நோயையும் பரப்ப முடியும்.
ஒருவருக்கு இரண்து நோயுமே ஒரே நேரத்தில் தொற்றக்கூடும். டெங்கு நோய் உயிர்க்கொல்லியாக இருக்கும் வாய்ப்பு இருந்தாலும், சிக்கன்குனியா மிக அரிதாகத்தான் இறப்பை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு நோய்களுக்குமே ஒரே மாதிரி அறிகுறிகள் உள்ளன. எனவே இரண்டின் வேறுபாட்டையும் அறிய வேண்டியது மிகவும் முக்கியம்.
சிக்கன்குனியா வைரஸ் கொண்ட பெண் ஏடெஸ் கொசு உங்களைக் கடித்தால், அதன் அறிகுறிகள் பொதுவாக 2 முதல் 12 நாட்களுக்குள் தெரியத் தொடங்கும். இதை இங்குபேஷன் காலம் என்று சொல்வார்கள். இதன் அறிகுறிகளில் அடங்கியவை
உடம்பில் உள்ள நோய்த்தொற்றை உடல் எதிர்ப்பதால் உடல் வெப்பம் அதிகமாகி அதிக காய்ச்சல் இருக்கும்.
பாதம், கணுக்கால், மணிக்கட்டு மற்றும் கைகளில் மிக அதிக மூட்டு வலி ஏற்படும். அங்கு சிறு வீக்கவும் ஏற்படும். ஏனென்ன்றால் இந்த வைரஸ் தசைகள் மற்றும் மூட்டுகளில் இருக்கும் செல்களை அழிக்கின்றன.
மிக அதிக முதுகு வலி
கண்கூசுதலுடன் கூடிய தலைவலி,
தசைவலி மற்றும் சோர்வு
அறிகுறிகள் தோன்றும்போது முதல் 48 மணி நேரத்தில் சருமம் சிவந்து சிரங்கு வரும். இது டார்ஸோ, கைகள் மற்றும் கால்களில் தோன்று.
தொண்டை கரகரப்பு
கண் வலி மற்றும் கன்ஜெக்டிவிட்டீஸ்
சிக்கன் குனியா உயிர்க்கொல்லி நோய் இல்லாவிட்டாலும் உடல் வலி பல மாதங்களுக்கு நீடிக்கும். இங்கு சிக்கன்குனியா அறிகுறிகள்பற்றி மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளவும்
டெங்கு தொற்றுள்ள பெண் ஏடெஸ் கொசுக்கள் உங்களைக் கடித்தால் அதன் அறிகுறிகள் 3 முதல் 14 நாட்களுக்குள் தெரியும். பொதுவாக இதில் அடங்கியுள்ள அறிகுறிகள்
திடீரென்று அதிக காய்ச்சல், அதுவும் நோய்த்தொற்று எதுவும் இல்லாமல். காய்ச்சல் 2–4 நாட்களில் அதிக வியர்வையுடன் வேகமாக குறையும்
தீவிர தலைவலி
கண்ணிற்கு பின்புறம் வலி, அதனால் கண் அசைவு அதிகமாதல்
குமட்டல்
வாந்தி
சோர்வுடன் படுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற உணர்வு
பொதுவாக 48 மணி நேரத்திற்குள் சிரங்குகள் தோன்றும். அதிலும் குறிப்பாக முகத்திலும் கைகால்களிலும்.
சிறிதளவு இரத்தக்கசிவு, மூக்கு அல்லது ஈறுகளில்
கழுத்து மற்றும் தொடை இணைப்பில் வீக்கம்
இதய துடிப்பு குறைதல், இதற்கு டேக்கிகார்டியா என்றும் பெயர்
இரத்த அழுத்தம் குறைதல்
சுவாசிப்பதில் கஷ்டம்.
இங்கு டெங்குவின் அறிகுறிகள்பற்றி மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளவும்
இந்த இரண்டு நோய்களிலிருந்தும் உங்களைப் தடுப்பதற்காக நீங்கள் உங்களை கொசுக்கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வெளியே உங்கள் குடும்பத்திற்கு சுலபமாக பாதுகாப்புக் கொடுக்க முடியும். உங்க்ள் குடும்பத்தினரின் உடையில் குட்நைட் ஃபேப்ரிக் ரோல்–ஆன் 4 புள்ளிகள் வைத்து விடுங்கள். இது 100%இயற்கை பொருள்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இது கொசுக்களிடமிருந்து 8 மணி நேரப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
வீட்டிற்கு உள்ளே பாதுகாப்புப் பெறுவதற்கு 2 மடங்கு சக்தியுள்ள குட்நைட் ஆக்டிவ்+சிஸ்டம் பயன்படுத்தவும். இதை பகல் நேரத்திலும் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் ஏடெஸ் கொசுக்கள் பகல் நேரத்தில்தான் அதிகம் செயல்படுகின்ன்றன.