X
இப்கபாது வாங்கவும்
Understand Mosquitoes April 8, 2019

சிக்கன்குனியா, அதன் அறிகுறிகள் மற்றும் அதை தடுப்பது போன்றவற்றைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள்.

சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவெங்கும் சிக்கன்குனியா பரவி ஒரு பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது நம் அனைவருக்கும் தெரியும். அந்த நோயின் பெயரில் சிக்கன் என்ற வார்த்தை இருந்த்தால் சிலர் அந்த நோய் சிக்கன்களால் அதாவது கோழிகளால் ஏற்படுகின்றன என்று கருதினார்கள். அந்த நோய் பற்றி சில தவறான கருத்துக்களும் பரவின. எனவே தவறான கருத்துக்களுக்கும் உண்மைகளுக்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துச் சொல்வது கடினமாக இருந்தது. இந்தக் கட்டுறையில் நாம் சிக்கன்குனியா, அதன் அறிகுறிகள் மற்றும் அதைத் தடுக்கும் முன்னெச்செரிக்கைகள் பற்றிப் பார்க்கலாம். கிமோகோண்டே என்ற மொழியில் சிக்கன்குனியா என்றால் முடங்குவது என்று பொருள். இது இந்த நோய் மூட்டு வலியால் இயக்கம் தடைபடுவதை சிறப்பாக விவரிக்கிறது. தென் தன்ஸானியா நாட்டில் முதல் முறையாக 1952 ஆண்டில் முதலில் பரவத் தொடங்கியதிலிருந்து, இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் சிக்கன்குனியா நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

 

ஆர்என்ஏ வைரஸ் என்பது டோகவிரிடே ஆல்ஃபாவைரஸ் ஜீனஸ் என்ற வகையைச் சேர்ந்தது. இந்த வைரஸ் தொற்று கொண்ட ஏடெஸ் ஏஜிப்டி அல்லது ஏடெஸ் அல்போபிக்டஸ் கொசுக்கள் கடிப்பதால் சிக்கன்குனியா நோய் பரவுகிறது. இதே கொசுக்கள்தான் டெங்கு மற்றும் ஜிகா நோய்களையும் பரப்புகின்றன. இந்த நோய் தொற்றியவுடன், 2 முதல் 12 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் அதன் அறிகுறி தோன்றலாம். சிலருக்கு அறிகுறியே ஏற்படாமலும் இருக்கலாம்.

 

 

சிக்கன்குனியாவின் அறிகுறிகள்

 

சிக்கன்குனியாவின் மிகப் பெரிய அறிகுறி காய்ச்சல். ஃபேப்ரிக் ரோல்-ஆன் சாதாரண காய்ச்சலிலிருந்து மாறுபட்டு இருக்கும். அதில் காய்ச்சலுடன்கூடவே மூட்டு வலியும் இருக்கும். இவற்றைத் தவிர, குமட்டல், சிரங்குகள், தலைவலி மற்றும் சோர்வு போன்ற பொதுவான அறிகுறிகளும் காணப்படும். சிக்கன்குனியா அறிகுறிகளும் ஜிகா, டெங்கு போன்ற நோய்களின் அறிகுறிகளும் ஒன்று பாவே இருப்பதால், அவை ஜிகா அல்லது டெங்கு என்று தவறாக கண்டறியப்படுகின்றன. சில மோசமான நிலைமைகளில் நரம்பு மண்டல, விழித்திரை அல்லது இதய கோளாறுகளும் ஏற்படக்கூடும். இதனால் வயதானவர்களுக்கு இந்த நோய் வந்தால் அவர்கள் குணமடைவதற்கு இளைஞர்களைவிட அதிக காலம் ஆகிறது. இந்த நோய் கண்ட சில நோயாளிகள் பல ஆண்டுகள் மூட்டு வலியுடனேயே வாழ்கிறார்கள்.

 

 

சிக்கன்குனியா எச்சரிக்கைகள்

 

சிக்கன்குனியாவிற்கு குணமடைதலோ அல்லது குறிப்பிட்ட ஒரு சிகிச்சையோ இல்லை. இந்த நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தும் இல்லை. ஒருவர் அதன் அறிகுறிகளை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். இதனால் இந்த நோய் வராமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கைகளைக் கையாள்வது அவசியமாகிறது.

 

சிக்கன்குனியா நோயை கண்டறிதல்

இந்த நோயைக் கண்டறிவதற்கு பரிசோதனைக்கூடத்தில் பரிசோதனை செய்ய வேண்டும். என்ஸைம்–லிங்குடு இம்யூனோசோர்பென்ட் அஸ்ஸே பரிசோதனை மூலம் சிக்கன்குனியா வைரஸ் தொற்று இருப்பதைக் கண்டறியலாம். மேலும் அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஓன்று உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்.

 

சிக்கன்குனியாவை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கைகள்

 

  1. சிக்கன்குனியா நோயை கொசுக்கள்தான் பரப்புகின்றன. இவை பகல் நேரத்தில் கடிக்கின்றன. எனவே நீங்கள் குட்நைட் ஆக்டிவ்+ போன்ற லிக்விட் வேப்பரைசரை பகல் நேரத்திலும்கூட பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு சில மணி நேரப் பாதுகாப்புத் தேவைப்பட்டால் குட்நைட் ஃபாஸ்ட் கார்டையும் கூட பயன்படுத்தலாம்.
  2. வீட்டிலும், வெளியிலும் கொசுத்தொல்லை இருப்பதால் உங்கள் குழந்தைகள் வீட்டிற்கு வெளியில் செல்லும்போது தமக்கென்று தனிப்பட்ட கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதில் சுலபமானது என்னவென்றால் அவர்கள் வெளியில் சொல்லும்போது நீஙக்ள் குட்நைட் ஃபேப்ரிக்ரோல் ஆனின் 4 புள்ளிகளை அவர்கள் உடையில் வைக்கலாம்.
  3. வானிலை அனுமதிக்கும்பட்சத்தில் உடல் முழுவதையும் மறைக்கும் முழு நீள உடைகளை அணிந்து சருமம் வெளியில் தெரிவதை தவிர்க்கலாம்.
  4. கதவுகள் மற்றும் ஜன்னல் திரைகளை மூடி வைத்து கொசுக்கள் வீட்டிற்குள் வருவதை தடுங்கள்
  5. வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது முக்கியமான நடவடிக்கை ஆகும். ஏனென்றால் கொசுக்கள் தேங்கியுள்ள தண்ணீரில்தான் இனப்பெருக்கம் செய்கின்றன.
  6. பயன்படுத்தாத கொள்கலன்கள், பழைய டயர்கள் போன்றவற்றை அப்புறப்படுத்தவும்.
  7. தண்ணீர் வைக்கும் பாத்திரங்கள் அனைத்தையும் மூடி வைக்கவும்.
  8. சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்
  9. ஏசி மற்றும் பிரிட்ஜ் ட்ரேக்களை அடிக்கடி சுத்தம் செய்யவும்]

 

முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடித்து சிக்கன்குனியாவைத் தவிர்க்கவும்.

Related Articles

கொசுக்களை விரட்டுவது எப்படி?

Read More

டெங்கு நோயாளிகளுக்கான உணவுக் கட்டுபாடு என்ன?

Read More

ஜப்பானிய மூளை வீக்கம்

Read More

மிகச்சிறந்த இயற்கையான கொசு விரட்டி எண்ணெயை தேர்வு செய்வது எப்படி?

Read More

நீங்கள் டெங்கு பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

Read More

சிக்கன்குனியாவிற்கும் டெங்குவிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

Read More

Find The Right Repellent

Find Your Protector