X
இப்கபாது வாங்கவும்
Understand Mosquitoes April 8, 2019

ஜப்பானிய மூளை வீக்கம்

ஜப்பானிய மூளை வீக்கம்: அடிக்கடி கேட்க்கப்படும் கேள்விகள்

 

1. ஜப்பானிய மூளை வீக்கம் என்றால் என்ன?

ஜப்பானிய மூளை வீக்கம் என்பது கொசுவினால் பரவும் நோய். இது க்யூலெக்ஸ் கொசுக்கள் பரப்பும் ஜப்பனீஸ் என்செபலிடிஸ் வைரஸால் ஏற்படுகிறது. இதில் விபத்து வசமாக மனிதர்கள் இந்த வைரஸின் பிடிக்கு உள்ளாகிஆர்கள். இந்த வைரஸ் முக்கியமாக விலங்குகளை தாக்குகிறது. அதாவது பன்றிகள் மற்றும் தண்ணீர் பறவைகள் (ஹெரான்ஸ் மற்ரும் எக்ரெட்ஸ் போன்றவை).  இந்த வைரஸ் மனிதர்களுக்குள் அதிக காலம் இருக்காது. அதுவும் மிக குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கும். எனவே உங்களைக் கடிக்கு கொசு அந்த வைரஸை உறிஞ்சு இன்னொருவருகு பரப்ப முடியாது.  இது ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் நாடுகளில் கிராமப்புறங்களில் மட்டும் காணப்படுகின்றன.

 

2. ஜப்பானீஸ் மூளை வீக்கத்தின் அறிகுறிகள் என்ன?

ஜப்பானீஸ் மூளை வீக்கம் உள்ளவர்களில் பெரும்பாலனோருக்கு எவ்வித அறிகுறியும் தெரிவது இல்லை. மற்றவர்களுக்கு (1%க்கும் குறைவானவர்கள்) தலைவலி மற்றும் மெனிஞ்சடீஸ் (மூளை திசுக்களில் வீக்கம்) போன்ற நரம்பு மண்டலப் பிரச்சினைகள் ஏற்படும்.  இதில் மற்ற அறிகுறிகளில் காய்சல், வாதம், கழுத்து இறுக்கம், கட்டுப்பாடின்மை. நட்க்கம், பக்கவாதம், மற்றம் ஒருங்கிணைப்பின்மை போன்றவை அடங்கும்.  நிலைமை மோசமடைந்தால் அல்லது சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் இந்த ஜப்பானீஸ் மூளைவீக்கம்  நரம்பு மண்டலத்தை நிரந்தரமாக பாதித்துவிடலாம்/இறப்பை  ஏற்படுத்தலாம்.

 

3. ஜப்பானீஸ் மூளை வீக்கத்திற்கு சிகிச்சை என்ன? இதற்கு தடுப்பு மருந்துகள் ஏதேனும் இருக்கின்றனவா?

ஜப்பானீஸ் மூளை வீக்கத்திற்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. அறிகுறிகளை ஆற்றலுடன் சமாளிப்பது மிகவும் முக்கியம். இதற்கு வலி நிவாரணிகள், காய்ச்சலைக் குறைப்பதற்கான மருந்துகள், அதிக திரவம் உட்கொள்ளுதல் போன்றவை முக்கியம். பொதுவாக நரம்பு மண்டல கோளாறு ஏற்படும் நோயாளிகளை மருத்துவமனையின் வைத்து கண்காணித்து உரிய மருத்துவம் செய்வார்கள்.

 

ஜப்பானீஸ் மூளை வீக்கத்திற்கு வர்த்தகரீதியான தடுப்பு மருந்து இருக்கிறது. ஆனால் இது 2 மாதங்களுக்கும் அதிகமுள்ளவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.  இந்த நோய் பரவும் இடங்களில் 30 நாட்களுக்கும் மேல் இருக்க நேரிடுபவர்கள் அல்லது ஜப்பானீஸ் மூளை வீக்கும் பரவும் இடங்களிலுள்ள கிராப்புறத்திலும் வெளியிலும் அதிக நேரம் இருக்க நேரிடுபவர்கள் இந்த தடுப்பு மருந்தைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.  இந்த தடுப்பு மருந்தில் 2 டோஸ்கள் உள்ளன. இதை 28 நாட்கள் இடைவெளியில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நோய் பரவும் இடங்களுக்கு பயணம் செய்வதற்கு முன்பு ஒரு வாரத்திற்குள் இரண்டாவது டோஸை எடுத்துக் கொள்ள வேண்டும்.   ஜப்பானீஸ் மூளை வீக்கத்திற்கான தடுப்பு மருந்து பற்றி உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.  கருத்தரித்த பெண்களுக்கு பொதுவாக இந்த தடுப்பு மருந்து கொடுக்கப்படுவது இல்லை.  ஆனால் இதை உறுதி செய்ய உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

 

4. ஒருவருக்கு ஜப்பானீஸ் மூளை வீக்கம் இருக்கிறதா என்று எப்படிக் கண்டறிவது?/இந்த ஜப்பானீஸ் மூளை வீக்கத்தை கண்டறிவதற்கான பரிசோதனைகள் என்ன?

ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதியில் இந்த நோய்த் தொற்று இருக்கும் பகுதியில் நரம்புப் பிரச்சினை இருக்கிறது என்று புகார்டு அளிக்கும் நோயாளிகளுக்கு ஜப்பானீஸ் மூளை வீக்கத்தை மூளையில் உள்ள திரவத்தை (செரிபரல் ஃப்ளூயிட்– சிஎஸ்எஃப்) பரிசோதனை செய்து கண்டறியலாம்.

 

5. ஜப்பானீஸ் மூளை வீக்கத்தை தடுப்பது எப்படி?

ஜப்பானீஸ் மூளை வீக்கம் நோய் முதன்மையாக க்யூலெக்ஸ் கொசுக்களால் பரவுகிற்அது. எனவே இந்த கொசுக்களிடமிருந்து வீட்டிற்கு உள்ளேயும் வெளியிலும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.  வெளியில் செல்வதற்கு முன்பு குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன் (அல்லது குட்நைட் கூல் ஜெல்/குட்நைட் பேட்சஸ் போன்றவற்றை) பயன்படுத்தி கொசுக்கள் கடிக்காமல் பாதுகாத்துக் கொள்ளவும். வீட்டில் இருக்கும்போது மாலை நேரத்தில் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி வைக்கவும். குட்நைட் ஆக்டிவ்+ மற்றும் குட்நைட் ஃபாஸ்ட் கார்டு போன்ற வீட்டு உபயோக கொசு விரட்டிகளை பயன்படுத்தவும். இவை கொசுக்களை இரவு முழுவதும் வராமல் தடுக்கும். மேலும் அதிக பாதுகாப்பிற்காக கொசுவலைக்குள் படுத்து தூங்குவது நல்லது.

 

6. ஜப்பானீஸ் மூளை வீக்கத்தை ஏற்படுத்தும் கொசு (க்யூலெக்ஸ் மற்று மன்சோனியா) எப்படி செயல்படுகிறது?

ஜப்பானீஸ் மூளை வீக்கம் எனப்து க்யூலெக்ஸ் கொசுக்களால் பரப்பப்படுகின்றன. இவை கிராமப்புற மற்றும் புற நகர் பகுதிகளில் காணப்படுகிறது.  க்யூலெக்ஸ் கொசுக்கள் இரவில் கடிக்கும்.  அவை மாசு நிறைந்த தண்ணீர், குழிகள், வயல்கள் அல்லது அதிக தாவரம் நிறைந்திருக்கும் தண்ணீரில் இனப்பெருக்கம் செய்யும்.  இவ்வகை கொசுக்கள் கால்நடைகள், பன்றிகள் மற்றும் பறவைகளை கடிக்கும்.  இந்த விலங்குகளுக்கு அருகில் வசிக்கும் மனிதர்களை விபத்து வசமாக கடிக்கலாம் – உதாரணமாக விவசாய பணி நடக்கும் நிலங்களுக்கு அருகில் வசிக்கும் விவசாயிகள்.

 

7. ஜப்பானீஸ் மூளை வீக்கம் பற்றி எனக்கு மேலும் விவரங்கள் எங்கே கிடைக்கும்?

உலக சுகாதாரக் கழகத்தின் (டபிள்யூஎச்ஓ)  சென்டர் ஃபார் டிஸீஸ் கன்ட்ரோல் (சிடிசி) மற்றும் நேஷனல் வெக்டர் போர்ன் டிஸீஸ் கன்ட்ரோல் புரோக்கிராம் ஆஃப் இந்தியா (என்விபிடிசிபி) போன்றவற்றின் இணையதளங்கள் ஜப்பானீஸ் மூளை வீக்கம் மற்றும் அதன் அறிகுறிகள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட விவரங்களைத் தரும்.

 

தலைவலி, வலிப்பு, கட்டுப்பாடின்மை, கழுத்து இறுக்கம் போன்ற ரம்பு மண்டல கோளாறுகள் காய்ச்சலுடன் ஏற்பட்டால், உங்கள் மருத்துவர், ஹெல்த் க்ளினிக் அல்லது மருத்துவம் அளிப்பவர்களை கலந்தாலோசிக்கவும்.

 

ஆதாரம்:

  • உலக சுகாதாரக் கழகம் (டபிள்யூஎச்ஓ),
  •  சென்டர் ஃபார் டிஸீஸ் கன்ட்ரோல் (சிடிசி)
  • மற்றும் நேஷனல் வெக்டர் போர்ன் டிஸீஸ் கன்ட்ரோல் புரோக்கிராம் ஆஃப் இந்தியா (என்விபிடிசிபி)

Related Articles

கொசுக்களை விரட்டுவது எப்படி?

Read More

டெங்கு நோயாளிகளுக்கான உணவுக் கட்டுபாடு என்ன?

Read More

மிகச்சிறந்த இயற்கையான கொசு விரட்டி எண்ணெயை தேர்வு செய்வது எப்படி?

Read More

நீங்கள் டெங்கு பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

Read More

சிக்கன்குனியாவிற்கும் டெங்குவிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

Read More

சிக்கன்குனியா, அதன் அறிகுறிகள் மற்றும் அதை தடுப்பது போன்றவற்றைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள்.

Read More

Find The Right Repellent

Find Your Protector