உங்கள் குழந்தை மழைக்காலத்தில் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறது. ஆனால் அதே நேரத்தில் நீங்கள் பயங்கரமான இன்ஃபெக்ஷன் எங்கேயாவது உங்கள் குழந்தையை தொற்றிக் கொள்ளுமோ என்று கவலைப்படுகிறீர்கள். அதிலும் குறிப்பாக டெங்கு பரவும் காலத்தில். டெங்கு காய்ச்சல் கொசுக்களால் பரவும் ஒரு நோய் ஆகும். இது ஏடெஸ் வகை கொசுக்கள் கடிப்பதால் ஏற்படுகிறது. இவற்றின் அடையாளம் இவற்றின் உடலில் கருப்பு வௌளைக் கோடுகள் இருக்கும். இந்த ஏடெஸ் கொசுக்களுக்கு முடையிட்டு லார்வாவாக உருவெடுத்து பிறகு வளர்ந்த பூச்சியாக மாறுவதற்கு ஒரு டீஸ்பூன் தண்ணீர் இருந்தால் மட்டும் போதும். எனவே எங்கு தண்ணீர் தேங்கி இருந்தாலும் அங்கே இந்த வகை கொசுவால் இனப்பெருக்கம் செய்ய முடியும். டேங்கு கொசு இனபெருக்கம் செய்யும் இடங்களைப் பற்றி இன்னும் விவரமாகத் தெரிந்து கொள்ள நாம் முதலில் அதன் வாழ்க்கை சுழற்சி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏடெஸ் வகை கொசுவின் வாழ்க்கை சுழற்சி
ஈரமான பாத்திரங்களின் உட்புற சுவர்களில் பெண் ஏடெஸ் கொசுக்கள் முட்டையிடுகின்றன. மழை மற்றும் இதர முறைகள் மூலம் தண்ணீர் அந்த முட்டைகளை நனைக்கும்போது 2 முதல் 7 நாட்களில் லார்வாக்கள் வெளி வருகின்றன. நான்கு நாட்களுக்குள் அந்த லார்வாக்கல் தண்ணீரில் உள்ள நுண்ணுயிர்களையும், ஆர்கானிக் பொருள்களையும் உட்கொள்கின்றன்ன. பிறகு அவை கூட்டுப் புழுக்களாக உருவாகின்றன. கூட்டுப் புழுக்கள் உணவு சாப்பிடுவதில்லை. அவை தனது உடலை வளர்ந்த பூச்சியாக உருமாற்றிக் கொள்கின்றன. இரண்டு நாள்களில் பறக்கும் கொசுவாகி விடுகின்றன. அதன் பின்னர் தண்ணீரிலிருக்கும் கூட்டின் ஓட்டை உடைத்து கொண்டு முழுமையாக வளர்ந்த பூச்சியாக வெளியே வருகின்றன. ஒரு ஏடெஸ் கொசுவி வாழ்க்கைக் காலம் ஒண்ணரை முதல் மூன்று வாரங்களில் முடிந்து விடுகிறது. கொசுக்களின் மாறி வரும் பழக்கங்களைப் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.
டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள்
முழுமையாக வளர்ச்சி அடைந்த் கொசுக்கள் தண்ணீர் தேங்கும் எந்த ஒரு மூலை முடுக்கிலும் இனப்பெருக்கம் செய்ய முடியும். இந்தியாவில் டெங்கு கொசுக்கள் இனபெருக்கம் செய்யும் இடங்களைப் பற்றி சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இவை டயர்கள், பேரல்கள் பிளாஸ்டிக் ட்ரம்கள், ஜெர்ரி கேன்களில் இனபெருக்கம் செய்ய விரும்புகின்றன என்று தெரிய வந்துள்ளது. ஆனால் இவை இனப்பெருக்கம் செய்ய வீட்டிற்கு உள்ளேயும் வெளியிலும் இன்னும் பல இடங்கள் இருக்கின்றன.
1. பால்களியில் செடிகள் வைக்கப்பட்டுள்ள பிளேட்டுகள்
2. ஏசி ட்ரேக்கள்
3. மண் பானைகள்
ஃபிரிட்ஜ் ட்ரேக்கள்
கழுவப்பட்ட பாத்திரங்களை வைக்கும் சமையலறை ரேக்குகள்
அடைத்துக் கொண்டுள்ள சமையலறை/ பாத்ரூம் சாக்கடைகள்
கூலர்கள்
பாத்ரூம்/சிஸ்டர்னில் கசிவிடங்கள்
வழக்கமாகப் பயன்படுத்தப்பதும் மூடப்படாத வாளிகள்/தண்ணீர் பாத்திரங்கள்
அலங்கார பூ ஜாடிகள்/தண்ணீருள்ள அலங்காரப் பொருள்கள்
பொன்சாய் செடிகள்/உட்புற செடிகள்
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
மேலே குறிப்பிட்ட இங்களில்லும் வீட்டில் இருக்கும் பாத்திரங்கள், பிளாஸ்டிக் ஜாடிகள், பாட்டில்கள், டயர்கள், பறவை குள்இயல்கள் அற்றும் வாளிகளில் அனாவசியமாக தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளவும். ஏனென்றால் இவற்றில்தான் ஏடெஸ் ஏஜெப்டி கொசுக்கள் முட்டைகளை இடுகின்றன. எனவே தண்ணீர் வைக்கும் பாத்திரங்களை மிகச் சன்னமான வலைகளைப் போட்டு மூடி வைத்திருக்க வேண்டியது அவசியம்.
டெங்கு கொசுக்கள் பகலில் அதிகம் செயல்படுகின்றன. எனவே லிக்விட் வேப்பரைசர்ஸ்கள், காயில்கள் அல்லது கார்டுகள் போன்ற கொசு விரட்டிகளை பயன்படுத்துங்கள். வீட்டிற்குள் பாதுகாப்புப் பெறுவதற்கு குட்நைட் ஆக்டிவ்+ பயன்படுத்தி உங்கள் குடும்பத்தினரை டெங்கு வரைஸிலிருந்து பாதுகாக்கவும்.
நீங்கள் வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது கொசு விரட்டிகளை போட்டுகக் கொண்டு செல்லவும். அதாவது ஃபேப்ரிக் ரோல்-ஆன் உங்கள் உடைகளில் 4 புள்ளிகள் வைத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியில் 8 மணி நேரம் வரை பாதுகாப்புப் பெறவும்.