இந்தியாவில் ஆண்டு தோறும் 366,561 டெங்கு இன்ஃபெக்ஷன்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு வேகமாகப் பரவும் இந்த நோய்த் தொற்று கவலை அளிப்பதாக உள்ளது. ஏடெஸ் வகை கொசு கடிப்பதால் இந்த டெங்கு நோய் பரவுகிறது. இந்த நோய் தொற்று ஏற்பட்டதும் டெங்குவிற்கான அறிகுறிகள் 3 நாட்களில் தெரியத் தொடங்கும். பொதுவாக அதிக காய்ச்சல், தலைவலி, உடலில் சிரங்குகள், மூட்டுக்களிலும் தசையிலும் வலி போன்றவை வரும். டெங்கு வைரஸை எதிர்க்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இதற்காக விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும். டெங்குவிலிருந்து விரைவாக குணமடைவதற்கு சிறந்த உணவுகள் என்ன என்று படித்துத் தெரிந்து கொள்ளவும்.
ஆரஞ்சு
டெங்கு காய்ச்சல் உள்ளவருக்கு ஆரஞ்சுப் சிறந்த பழமாக இருக்கிறது. ஏனென்றால் இதில் இயற்கையாவே விட்டமின் சி இருக்கிறது. இது உங்கள் உடலில் இருக்கும் ஆன்டிபாடீஸ் விரைவில் குணமடைய உதவுகிறது. நீங்கள் சாத்துக்குடி, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களின் சாற்றை எடுத்துக் கொள்ளலாம்.
கஞ்சி
மிருதுவான மற்றும் குழைவான உணவுகள் டெங்கு நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன. ஏனென்றால் இவை சுலபமாக செரிமானம் ஆகும். கஞ்சி ஒரு மிகச் சிறந்த உணவு. இதை சுலபமாக விழுக முடியும் ம்:ஏலும் சுலபமாக செரிமானம் ஆகும். இதில் அதிக அளவு நீர்ச்சத்தும் இருக்கிறது. கஞ்சியில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அது நோயை எதிர்க்க உங்களுக்கு உதவும்.
இஞ்சித் தண்ணீர்
டெங்கு நோய் கண்டவர்களுக்கு அதன் தாக்கத்தை சமாளிப்பதற்கு அதிக திரவச்சத்து தேவை. டெங்கு காய்ச்சலால் வரும் குமட்டலை சமாளிக்க இஞ்சித் தண்ணீர் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இளநீர்
டெங்கு காய்ச்சலால் உடலில் நீர்ச்சத்து வற்றி போகும். ஏனவே உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க இளநீர் பருகுவது நல்லது. இது இயற்கையான தண்ணீர், இதில் அத்தியாவசிய மினரல்கள் மற்றும் எலெக்ட்ரோலைட்ஸ் இருக்கின்றன. எனவே டெங்கு நோயாளிகளின் உணவில் இளநீர் ஒரு முக்கிய திரவமாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
சூப்
இந்த நோயின் அறிகுறிகளை சமாளிப்பதற்கு சூப் எடுத்துக் கொள்வது ஒரு சிறந்த வழி. ஏனென்றால் அதில் மசாலாக்கள் குறை மற்றும் எளிதாக செரிமானம் ஆகும். மேலும் குடல் இயக்கத்திற்கும் ஏற்றது. டெங்கு நோயாளிகள் குறிப்பாக அதிக எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.
காய்கறிகள் மற்றும் பழச்சாறுகள்.
கேரட்டுகள், வெள்ளரி மற்றும் கீரைகள் போன்றவை டெங்குவின் அறிகுறிகளுக்கு குணமளிக்க ஏற்றவை.இவற்றில் அத்தியாவசியமான விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளதால், இவை டெங்கு நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு உதவும்.
இதைத் தவிர, ஆரஞ்சு, கொய்யா, கீவி, ஸ்ட்ராப்பெரி மற்றும் பைனாப்பிள் போன்ற பழச்சாறுகள் வைரல் இன்ஃபெக்ஷனை எதிர்க்கும் லிம்ஃபோசைட்ஸை உருவாகும் செயல்பாட்டை மேம்படுத்தும். எனவே டெங்கு நோயாளிகளுக்கு இவற்றை துணை உணவாக கொடுப்பது அவசியம்.
பப்பாளி இல்லைகள்
சமீபத்திய ஆய்வின்படி, பப்பாளி இலைகள் டெங்குவை குணப்படுத்துவதற்கு பலன் அளிக்கும் என்றும் டெங்குவினால் மிக அபாயகரமாக குறைந்துவிடும் இரத்த பிளேட்லெட்டுகளை உருவாக்கி அவை மீண்டும் அதிகரிக்க உதவும் என்று தெரிய வந்துள்ளது.
இங்கு பப்பாளி இலைகளின் குணமளிக்கும் தன்மையைப் பற்றி மேலும் விவரம் அறியவும்
டெங்கு மீண்டும் வராமல் தடுப்பது எப்படி?
இந்த நோய் மீண்டும் வரக்கூடும். முதல் முறை நோய் கண்டபோது முறையான சிகிச்சை அளிக்கப்படாதவருக்கும் அல்லது சிகிச்சையில் மருந்துகளை முழுமையாக எடுத்துக் கொள்ளாமல் பாதியில் கைவிட்டவர்களுக்கும் இந்த நோய் மீண்டும் வரலாம். உங்கள் உடலில் போதுமான அளவில் நீர்ச்சத்தை பராமரிக்க வேண்டும். அடிக்கடி மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும். ஏடெஸ் வகை கொசுக்கள் கடிப்பதால் டெங்கு பரவுவதால், கொசுக்களை வராமல் தடுப்பது மிகவும் முக்கியம். 2 மடங்கு சக்தி கொண்ட குட்நைட் ஆக்டிவ்+ சிஸ்டத்தை வீட்டிற்குள் பயன்படுத்தி கொசுக்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது உங்கள் உடைகளில் ஃபேப்ரிக் ரோல்-ஆன் 4 புள்ளிகள் வைத்துக் கொண்டு செல்லவும். இது 8 மணி நேரப் பாதுகாப்புத் தரும். இது 100% இயற்கையான பொருள்களினால் தயாரிக்கப்பட்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் பாதுகாப்பானது. டெங்கு நோயின் அறிகுறிகளைப் பற்றியும், அதிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் மேலும் விவரங்களை இங்கு அறியவும்.