டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு நோய். இது நான்கு வெவ்வேறு விதமான வைரஸ்களால் பரவுகின்றன. DENV 1-4 வைரஸ்கள் ஏடெஸ் கொசுக்கள் மூலம் பரவுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 39 கோடி டெங்கு நோயத் தொற்றுகள் அறிவிக்கப்படுகின்றன. இதில் 9.6 கோடி பேருக்கு அறிகுறிகள் தெரிகின்றன. இன்று 128க்கும் அதிகமான நாடுகளில் சுமார் 390 கோடி மக்கள் டெங்கு அபாயத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.
ஃப்ளூபோன்று திடீரென்று காய்ச்சலும் தலைவலியும் வரும் இதில் சருமத்தில் சிரங்குகள், தசை வலி, மூட்டு வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற இதர அறிகுறிகளும் அடங்கும். மோசமான சில நிலைகளில் அதிக ரத்தப்போக்கு (ஹேமரேஜிங்) ஏற்படலாம் மற்றும் இறப்பு நேரிடலாம்.
டெங்கு நோய் ஏடெஸ் கொசுக்கள் மூலம் பரவுகிறது. இந்த கொசு பகலில் (வெயில் நேரங்க்ளில்) கடிக்கிறது. ஒரு கொசுக்கடிகூட டெங்குவை ஏற்படுத்தக்கூடு. எனவே நம் குடும்பத்தினரை வீட்டிற்கு உள்ளேயும், வெளியிலும் பாதுகாப்பது மிகவும் அவசியம். அதிலும் குறிப்பாக பகல் நேரத்தில். வீட்டிற்கு வெளியில் செல்வதற்கு முன்பு, குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன் (அல்லது குட்நைட் கூல் ஜெல்/பேட்சுக்கள்) போன்ற சுய பாதுகாப்பு கொசு விரட்டிகளைப் பயன்படுத்தவும். இவை கொசுக்கடையை தடுக்கும்.
வீட்டில் இருக்கும்போது மாலை நேரத்தில் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி வைக்கவும். குட்நைட் ஆக்டிவ்+ மற்றும் குட்நைட் ஃபாஸ்ட் கார்டு போன்றவற்றை பகல் நேரத்திலும் பயன்படுத்தி கொசுக்கள் வராமல் தடுங்கள்.
டெங்கு நோயை பரிசோதனைக் கூட பரிசோதனைகள் மூலம் உடலில் டெங்கு ஆன்டிபாடீஸ் (IgG மற்றும் IgM) போன்றவை இருக்கிறதா என்றும், பாலிமர் செயின் ரியேக்ஷன்ஸ் (PCR) மூலம் வைரஸ் இருக்கிறதா என்றும் கண்டறியலாம். நோயாளி இவ்வித அறிகுறிகளை சொன்ன சில நாட்களுக்குள் இந்த பரிசோதனைகளைச் செய்வது நல்லது. இந்த பரிசோதனைகளை உள்ளூர் மருத்துவமனைகள் அல்லது ஹெல்த் க்ளினிக்குகளில் செய்து கொள்ளலாம்.
இதற்கு குறிப்பிட்ட சிகிச்சைகள் எதுவும் இல்லை. அறிகுறிகளை சிறப்பாக கட்டுப்படுத்துவது முக்கியம். அதிலும் குறிப்பாக உடலில் போதுமான திரவச் சத்துக்களை பராமரிக்க வேண்டியது அவசியம். டெங்குவிற்கு வர்த்தகரீதியான தடுப்பு மருந்துகள் கிடைக்கின்றன. இவை மெக்ஸிகோ, பிரேஸில், எல் சல்வடார் மற்றும் பிலிப்பைன்ஸில் கிடைக்கின்றன. இந்த மருந்தை உலகளவில் பயன்படுத்த உலக சுகாதாரக் கழகம் இன்னும் அதிகாரபூர்வமாக அனுமதி அளிக்கவில்லை. ஆனால் இந்த நோய் அதிகம் பரவும் நாடுகளில் இந்த தடுப்பு மருந்தை அந்த நாட்டின் நோய்த் தடுப்பு திட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது உலகம் எங்கில்ம் டெங்குவிற்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்க பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. டெங்கு கொசுக்கள் கடிக்காமல் தவிர்க்க நாம் போதுமான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
உலக சுகாதாரக் கழகத்தின் (WHO) இணையதளம், சென்டர்ஸ் ஃபார் டிஸீஸ் கன்ட்ரோல் (CDC) மற்றும் தி நேஷனல் வெக்டர் ஃபோன் டிஸீஸ் கன்ட்ரோல் புரோக்கிராம் ஆஃப் இந்தியா (NVBDCP) போன்றவற்றில் டெங்கு நோய், அதன் அறிகுறிகள மற்றும் அதற்கான சிகிச்சைகள் பற்றிய தகவல்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு திடீர் காய்ச்சல், தலைவலி மற்றும்/அல்லது சிரங்கு ஏற்பட்டால் உடனே உங்கள் மருத்துவர், ஹெல்த் க்ளினிக் அல்லது மருத்துவ வசதி அளிப்பவர்களிடம் சென்று ஆலோசனை பெறவும்.