இந்த பிளாகை எழுதியவர் ம்ம்மி பிளாகர், ஷில்பா பிண்ட்லிஷ்
பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித் துறையில் பணி புரிந்து கொண்டிருக்கும் நான், பள்ளிகளில் குழந்தைகளுக்கு முக்கியமான பாடங்களைத் தவிர ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை பற்றி சொல்லித் தர வேண்டும் என்று வலிமையாகக் கூறுகிறேன். இதற்காக தற்போதுள்ள பாடத்திடங்களை மேம்பதுத்துவது மட்டுமின்றி, குழந்தைகளுக்கு இள வயது முதலே நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொடுத்து, அவர்களின் சுய சுகாதாரத்தைப் மிகச் சிறப்பாக்க பராமரிக்கவும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இதற்கான பள்ளி நிர்வாகத்தினரும் பெற்றோர்களும் இணைந்து குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அபாயம் ஏற்படுத்தும் நோய்களைத் தடுக்கும் முறைகளை உருவாக்க வேண்டும். மோசமான சுகாதாரத்தை எதிர்க்கும் புத்திசாலித்தனமான வகைகளில் பின் வருவன அடங்கும்:
கிருமிகளை தேய்த்து நீக்குங்கள்:
முக்கியமான நேரங்களில் உங்கள் குழந்தைகளின் கைகளை கழுவச் சொல்லுங்கள்: அதாவது உணவு சாப்பிடுவதற்கு முன்பு, கழிப்பறைக்கு சென்று வந்த பிறகு, இருமல் வந்த பிறகு, தும்மல் வந்த பிறகு, குப்பைத் தொட்டிகளை பயன்படுத்திய பிறகு போன்ற நேரங்களில். இந்த பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பதால், உங்க குழந்தைகளுக்கு நோயை ஏற்படுத்தும் பலவிதமான கிருமிகளை நீக்க முடியும். டெர்மடாலிஸ்ட்டுகள் பரிசோதித்த, மற்றும் ஆல்காஹால் இல்லாத ஹேண்ட் சானிடைஸிங் வைப்புகளை உங்கள் குழந்தைகளின் பையில் வைத்திருங்கள். தண்ணீர் இல்லாத இடங்களில் இவற்றை வழக்கமாக சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தலாம்.
சுய சுகாதாரம்:
நல்ல சுகாதார பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு ஆரம்பப் பள்ளிகளிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். அதுவும் முழு சுத்தமாக இருப்பது எவ்வாறு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்று அறியாத வயதிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் இந்த அடிப்படைப் பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதற்காக தாமே அப்பழக்க வழக்கங்களை வாழ்க்கையில் முன்னுதாரணமாகக் கடைப்பிடிக்க வேண்டும். பல்தேய்ப்பது, குளிப்பது, உடைகளை மாற்றுவது, நகம் வெட்டுவது போன்ற தினசரி வேலைகளை செய்ய வேண்டும். இவற்றை விடாமல் செய்ய வேண்டும். இதன் மூலம் குழந்தைகள் தொற்று நோய்களுக்கு ஆளாகாமல் இருப்பார்கள் அல்லது பள்ளி/படிப்படை தவற விடமாட்டார்கள்.
இதைத் தவிர டெங்கு, சிக்கன்குனியா மற்றும் மலேரியா போன்ற பல நோய்களின் ஆபத்தும் நம்மை சூழ்ந்திருக்கின்றன. எனவே வெளிப்புறத்தில் பகலில் கடிக்கும் கொசுக்களிடமிருந்து பரவும் நோய்களிலிருந்து பாதுகாத்துக்க் கொள்ளும் முறைகளை பயன்படுத்த வேண்டும். வீட்டிலிருந்து வெளியில் செல்லும் முன்பு கொசுவிரட்டிகளை போட்டுக் கொள்வதை பழக்கமாக்கிக் கொள்ளவும்.
குழந்தைகளுக்கு பிசுபிசுப்பான க்ரீம்கள் அசௌகரியமாக இருக்கும். எனவே அவர்கள் குட்நைட் ஃபேப்ரிக் ரோல்–ஆன் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துங்க்ள். இது பள்ளியில் நாள் முழுவதும் பாதுகாப்புத் தரக்கூடிய புதுமையான கொசு விரட்டி. அவர்களது உடையில் 4 புள்ளிகள் வைத்தால் போதும், அவர்களுக்கு கொசுக்களிடமிருந்து 8 மணி நேரம் வரை பாதுகாப்புக் கிடைக்கும்.
இது 100% இயற்கையானது. குழந்தை நல மருத்துவர்களின் சான்று பெற்றது. எனவே பயன்படுத்துவதற்கு முற்றிலும் பாதுகாப்பானது. இதில் சிறந்த விஷயம் என்னவென்றால், இவற்றை உடையில் போட்டுக் கொண்டால் போதும். உங்கள் சருமத்தில் போட்டுக் கொள்ள வேண்டாம் (இது கறை ஏற்படுத்தாது).
சுத்தமான கழிப்பறைகள்/ஓய்வு அறைகள்:
குழந்தைகளுக்கு பள்ளிகளின் கழிப்பறைகள் சுத்தமாக இருக்க வேண்டும். கழிப்பறைகளில் எப்போதும் தண்ணீர் வசதி இருப்பதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். வாஷ் பெசின்கள், சோப் டிஸ்பென்சர்கள், கதவு கைப்பிடிகள், கைப்பிடிகள் போன்ற இடங்களை பள்ளி பணியாளர்கள் கிருமிகள் இல்லாமல் தினமும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். இதன் மூலம் கிருமிகள் பரவுவதை தடுக்க முடியும். கழிப்பறைகள்/ஓய்வறைகளில் பக்கத்தில் துர்நாற்றம் வீசுவதை தடுக்க வேண்டும். இதற்காக அங்கு பெருக்கி, துடைத்த பிறகு ஏர் ஃபிரெஷ்னர்களை ஸ்ப்ரே செய்ய வேண்டும்.
குப்பைகளை அகற்றுதல்
பள்ளி வளாகத்திற்குள், இருக்கும் நிறைய வீண் பொருள்களை நாள் முடிவில் குப்பை கூடைகளில் சேகரிக்க வேண்டும். இது பல பாக்டீரியல் நோய்கள் மற்றும் சுவாச அலர்ஜிகளுக்குக் காரணமாக இருக்கிறது. இந்த மைதானங்கள் நோய் ஏற்படுத்தும் கொசுக்களுக்கு முக்கியமான இடமாக இருக்கின்றன. எனவே பள்ளி நிர்வாகம், வகுப்பறையை விட்டு விலக்கி தனியான ஒரு இடத்தில் குப்பை குழியை தோண்டி அதில் குப்பைகளை சேர்த்து மட்கச் செய்யுமாறு, மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்தும். இது கற்றுக் கொள்ள வைப்பது மட்டுமின்றி, குழந்தைகளிடையே தொற்று நோய் பரவாமலும் தடுக்கும்.
நோயைக் கையாளுதல்:
சரியான சுகாதார வழிமுறைகளைக் கைப்பற்றினாலும், குழந்தைகள் பள்ளிக்கு வெளியில், காதாரமற்ற சுற்றுபுறங்களில் இருக்கிறார்கள் என்று நீங்கள் சந்தேகித்தால், அல்லது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்துள்ளது என்று சந்தேகித்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குழந்தைகள் ஒரு ஆண்டில் நோய்வாய்ப்படக்கூடிய தருணத்தில் அவர்களுக்கு தடுப்பு மருந்து கொடுப்பதை பெற்றோர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்குகு உடல் நலம் சரி இல்லை என்று தெரிந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்பக்கூதாது. ஏனென்றால் வகுப்பில் மாணவர்கள் ஒன்றாக இருக்கும்போது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நோய் பரவக்கூடும்.
குழந்தைகளின் உடல் நலத்தில் பெரும்பங்கு வகிக்கும் பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் குழந்தைகளின் நடத்தை மாற்றி அமைக்க் முடியும். மேலும் சிறந்த சுகாதாரப் பழக்க வழங்களைக் கடைப்பிடிக வைத்து அவர்களுக்கு நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்த முடியும்.