X
இப்கபாது வாங்கவும்
Know About Diseases May 28, 2019

மலேரியாவின் அறிகுறிகளைத் தெரிந்து கொண்டு, இரவு நேர கொலைகார கொசுக்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் என்பது முக்கியமாக கருதப்படுகிறது.  பலர் ஆரோக்கியமாக இருப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.  பெரும்பாலானோர் வழக்கமான உடற்பயிற்சி செய்து, ஆரோக்கியமான உணவுகளை உண்டு,  உடல் நலத்தை பராமரிக்கிறார்கள். ஆனால் பலர்  மிகக் கடினமான பயிற்சிகளைப் போலின்றி பெரிய பலனைத் தரும் இந்த சிறிய முயற்சிகளை மேற்கொள்ளாமல் உடல்நலத்தை இழக்கிறார்கள்.

 

சமீப காலமாக, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மலேரியா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.  ஏனென்றால் தடுப்பு முறைகளும், இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வும் அதிகமாகியுள்ளன. மலேரியா நோய் என்பரு ஒரு செல் பிளாஸ்மோடியம் பாராசைட்டால் ஏற்படுகிறது.  மலேரியாவை ஏற்படுத்தும் பாராசைட்டுகளில் ஐந்து வகை உள்ளன.  இது இந்த பாராசைட் தொற்று இருக்கும் ஏனோஃப்லஸ் என்ற வகை பெண் கொசுவால் பரவுகிறது.   மலேரியா நோயை முழுமையாக குணப்படுத்தலாம். ஆனால் மலேரியானின் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் காணப்பட்டதுமே ஆரம்பத்திலேயே நோயை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.

 

மலேரியாவின் அறிகுறிகள் மற்றும் அடையாங்களை கண்காணியுங்கள்

 

 

இந்த நோய்த் தொற்றுள்ள கொசு கடித்த 3 முதல் 10 நாட்களில் மலேரியாவின் அறிகுறிகள் தெரியத் தொடங்கும்.  ஆரம்பத்தில் அதிக காய்ச்சல் மற்றும் உடல் வலி இருக்கும். இதில் தலைவலி, குளிர், காய்ச்சல், மஞ்சள் காமாலை, வாந்தி, மூட்டு வலி, வலிப்பு, விழித்திரை பாதிப்பு, நடுகம்,  சிறுநீரில் ஹீமோக்ளோபின் இருத்தல் போன்ற அறிகுறிகளும் அடங்கும். பெரிய்வர்களைவிட குழந்தைகளிடையே மலேரிய அறிகுறிகள் உயிருக்கே ஆபத்தானவையாக இருக்கும்.

 

சிலருக்கு மற்றவர்களை விட மலேரியா அறிகுறிகள் அதிக தீவிரமாக இருக்கம். இதில் பி. ஃபல்சிபுரம் என்பது ஒரு வகை. இது ஒருவர் உயிர் வாழ்வதையே மிகவும் பாதிப்பதாக இருக்கும் அல்லது நரம்பு மண்டலத்தை மிகவும் பாதிக்கும். இதில் சுவாசக் கோளாறுகள், பக்கவாதம் மற்றும் இறப்பு போன்ற சிக்கல்களும் இருக்கின்றன.

 

மலேரியா எவ்வாறு கண்டறியப்படுகிறது?

 

மலேரியாவைக் கண்டறிவது விரைவானது மற்றும் சுலபமானது. ரேபிட் டயாக்னோஸ்டிக் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தி மருத்துவர் சில நிமிடங்கள்ளிலேயே இந்த நோய் இருக்கிறதா என்று கண்டு பிடித்து விடுவார். ஒரு எளிதான இரத்தப் பரிசோதனை இந்த நோய் இருப்பதை சொல்லிவிடும்.

 

மலேரியாவை தடுப்பது எப்படி?

 

இப்பொதெல்லாம் மலேரியாவிற்கு பல சிகிச்சைகள் இருக்கின்றன. ஆனால் கொசு விரட்டிகள் மற்றும் கொசு வலை பயன்படுத்துவது மிகச் சிறந்த முன்னெச்சரிக்கை ஆகும்.

 

நீங்கள் வீட்டில் குட்நைட் ஆக்டிவ்+ போன்ற லிக்விட் வேப்பரைசர் கொசுவிரட்டியை பயன்படுத்துவதன் மூலம் கொசுக்களை தடுக்கலாம்.    மேலும் நீங்கள் படுக்கைக்கு கொசு வலை மற்றும் ஜன்னல்களுக்கு கொசுவலை பொருத்தி தடுக்கலாம். வெளியில் செல்லும்போது, உடையில் குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆனை 4 சொட்டுக்கள் வைத்து கொசுக்களை அருகில் வராமல் தடுக்கலாம்.

 

 

தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும். அடிகடி பூஜாடிகள், ஏசி மற்றும் ஃபிரிட்ஜ் ட்ரேகளில் தேங்கு தண்ணீரை வடிக்கவும். இவை கொசுக்கள் இனபெருக்கம் செய்வதற்கு ஏற்றவை.  நீங்கள் வசிக்கும் இடங்களில் பூச்சிக் கொல்லிஐ ஸ்ப்ரே செய்யவும். இதன் மூலம் கொசுக்கடி ஏற்படாமல் தடுத்து நோய்களை தவிர்க்க முடியும். எனவே அடிக்கடி மருத்துவ சிகிச்சைகளை குறைக்கலாம்.

 

மலேரியாவிற்கான சிகிச்சைகள்

 

மலேரியாவிற்காக பயன்படுத்தி பரிசோதிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. மலேரியாவின் வகைக்கு ஏற்ப மருத்துவர் உங்களுக்கு மருந்தையும் அதன் அளவையும் பரிந்துரைப்பார்.

 

  • அர்டெமின்சினின் என்பது மலேரியாவிற்கு மிகவும் பரிந்துரைக்கப்படும் மருந்தாகும்.
  • லுமேஃபான்ட்ரைன், மெஃபோக்வைன் அல்லது பைரெம்தமைன் அல்லது சல்ஃபாடாக்ஸைன் போன்றவையும் பிரபலமானவை. ஆனால் ஆர்டெமின்சினின் போல பிரபலமானவை அல்ல.
  • பிப்ராக்வை மற்றும் டைஹைடரோஆர்டெமின்சினின் என்பது மலேரியாவிற்கு பரிந்துரைக்கபடும் மற்றோரு காம்பினேஷன் மருந்தாகும்.
  • குழந்தைகள் மற்றும் கருத்தரித்துள்ள தாய்மார்களுக்கு முதல் ட்ரிம்ஸ்டருக்கு பிறகு காம்பினேஷன் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அதாவது சல்ஃபடோக்ஸைன் அல்லாது பைரைமெத்தமைன் போன்றவை தரப்படுகின்றன.
  • நோய் தீவிரமாக இருந்தால் இன்ட்ராவீனஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது மற்ற சிகிச்சை முறைகளைவிட மிகவும் ஆற்றல் கொண்டது.

 

 

ஆரம்பத்தில் நோயைக் கண்டறிவதன் மூலம் துல்லியமான சிகிச்சை அளித்தால், மலேரியா கிருமிகள் மருந்துகளை எதிர்க்கும் தன்மை இல்லாமலேயே, முழுமையாக குணமடைய முடியும். இது மலேரிய மீண்டும் தாக்கும் அபாயத்தைக் குறைக்க்கும். இருந்தாலும் உங்களுக்கு மலேரியா தொடர்பான அறிக்குறிகள் தென்பட்டால் உங்கள் மருத்துவரிடம் சென்று மலேரியாவிற்கான பரிசோதனைகளை செய்து கொள்ளவும்.

 

ஆனால் வரும் முன் காப்பது நல்லது. நாம் கொசு விரட்டிகளை பயன்பதுத்தி மலேரியா போன்ற நோய்களை தடுப்போம்.

Related Articles

உங்கள் குழந்தைகளை டெங்குவிலிருந்து பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய 5 வழிமுறைகள்

Read More

குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் – தடுப்பது, அறிகுறிகள் மற்றும் சிகிச்சை.

Read More
சிட்ரன்னா எண்ணெய்கள் மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய்கள் - 100% இயற்கை கொசுக்கள் விலகல்

இயற்கையான கொசு விரட்டிகளை புரிந்துகொள்ளுதல் – சிட்ரோனெல்லா மற்றும் யூகலிப்டஸ் ஆயில்

Read More

உங்கள் குழந்தையை டெங்கு மற்றும் சிக்கன்குனியாவிலிருந்து பாதுகாப்பதற்கான 4 குறிப்புகள்

Read More

இந்தியாவில் மழைக்காலதில் மலேரியா மற்றும் டெங்கு நோய்கள் அதிகரிக்கின்றன.

Read More

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளையும் அடையாளங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Read More

Find The Right Repellent

Find Your Protector