இதை எழுதியவர் ஒரு அம்மா: அவந்திகா சித்லங்கியா
மழைக்காலம் எனக்கு பிடித்த பருவ காலம் ஆகும். மழை என்பது அற்புதமான வானிலை. பச்சை பசேல் என்ற சுற்றுச்சூழல்கள் என் மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். மேலும் இது நான் பிறந்த மாதமும் ஆகும். என் குழந்தைக்கும் என்னைப் போலவே தண்ணீர் படிக்கும் – குளத்தில், குளிக்கும்போது, அல்லது தண்ணீர் குடிக்கும்போது அதனுடன் விளையாடுவது போன்றவை பிடிகும். மழை பெய்யும்போது அவன் மிகவும் மகிழ்ச்சியடைகிறான். இடி மின்னல்கூட அவனுக்கு பயம் இல்லை என்று சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
சில விஷயங்களை ஒவ்வொரு பெற்றோரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் குழந்தைகள் மழைக்காலத்தை அனுபவித்து மகிழ முடியும்.
1. தடுப்பு மருந்துகள்
மழைக்காலத்திற்கு முன்பு ஃப்ளூ ஷாட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால் இந்த காலத்தில்தான் வைரஸ்கள் அதிகம் பரவுகின்றன. இந்தக்காலத்தில் H1N1 போன்ற வைரஸும் எல்லா இடங்களிலும் காணப்படும். இது தொற்றக்கூடியது என்பதால் நீங்கள் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் தடுப்பு மருந்து பற்றிய ஆலோசனையைக் கேளுங்கள். அது பற்றி தெரிந்து கொண்டால், நீங்கள் கவலை இல்லாமல் இருக்கலாம். கடந்த மழைக்காலத்தில் என் குழந்தைக்கு ஃப்ளூ வந்தது. அந்த வாரத்தை நான் மறக்கவே மாட்டேன். அதன் பிறகு குழந்தை நல மருத்துஅர் சொன்ன இன்ஃப்ளூயன்ஸா ஷாட் மற்றும் இதர தடுப்பு மருந்துகளை கொடுத்தேன்.
2. மழைநீர்
உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்வதாக இருந்தால், அவனுக்கு நீங்கள் மழைக்காலத்திற்கான ஷூக்கள் அல்ல்து க்ரோக்ஸ்/பூட்ஸ் மற்றும் ரெயின்கோட் போன்றவற்றை போட்டு அனுப்ப வேண்டும். அந்த காலணி சௌகரியமானதாகவும், வழுக்காமலும் இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் மழைக்காலம் என்றால் எல்லா இடமும் வழுக்கக்கூடியதாக இருக்கும். மேலும் குழந்தைகள் மழைநீரில் விளையாடாமல் இருக்க மாட்டர்கள். பிரின்டையும் கலரைம் மட்டும் பார்த்து ரெயின் கோட்டை வாங்காதீர்கள். பிளாஸ்ட்டிக்கின் தரத்தையும், அது நல்ல பிராண்டுதான என்று பார்த்து வாங்கவும். என் குழந்தையிடம் ரெயின் கோட் இருக்கிறது ஆனால் அவன் அதை போட்டுக் கொள்ள மறுக்கிறான். எனவே இரண்டு பேருக்கும் போதுமான பெரிய க்டையை வாங்கினேன். உங்கள் குழந்தை ரெயின் கோட் போட்டுக் கொள்ள மறுத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.
3. குழந்தைகளை பூச்சிகள் மற்றும் கொசுக்களிடமிருந்து பாதுகாப்பாக வையுங்கள்
மழைக்காலமோ இல்லையோ, எந்த காலத்திலும் கொசுக்கள் காணப்படுகின்றன. இதற்கு பல காரணங்கள் உள்ளன. மழைக்காலத்தில் ஒரிரண்டு தினங்கள் மழை நின்றிருந்தால், கொசுக்கள் விரைவாக இனப்பெருக்கம் செய்கின்றன. இதற்கு தேங்கி இருக்கும் தண்ணீர்தான் காரணம். இதில் கொசுக்கள் மிகவும் அச்சுறுத்தலாக இருப்பதற்கு காரணம் அவை டெங்கு, சிக்கன் குனியா மற்றும் மலேரியா போன்ற நோய்களைப் பரப்புவதுதான்.
வானிலை அனுமதிக்கும்போது, வெளியில் செல்லும்போது என் குழந்தைக்கு முழு பேண்ட் போட்டு விடுகிறேன். ஆனால் ஒரு விஷயம். நான் நாங்கள் வெளியில் செல்லும் ஒவ்வொரு முறையும் கொசு விரட்டியை போட்டுக் கொள்கிறோம். நான் சமீப காலமாக குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன் கொசு விரட்டியை பயன்படுத்த ஆரம்பித்துள்ளேன். இது 100% இயற்கையானது என்பதால் எனக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது. பயன்படுத்தவும் மிகவும் சௌகரியமானது! நீங்கள் இதை உங்கள் உடையில் 4 புள்ளிகள் வைத்துக் கொண்டால் மட்டும் போதும்.
4. எங்கு விளையாடுவது?
மழைக்காலத்தில் பல காரணங்களினால் பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளை வெளியில்விளையாடுவதற்கு பயப்படுகிறோம். ஆனால் மழை பெய்தா நாட்களிலாவது நாம் குழந்தைகளை வெளியில் அனுப்ப வேண்டும். கொசுக் கடியையும், பல நோய்களைப் பற்றியும் நமக்கு பயமாக இருந்தால், நம்மை பாதுகாப்பதற்காக பல கொசு விரட்டிகள் இருக்கின்றன். மழைக்காலம் சுற்றுலா செல்ல ஏற்ற காலம் ஆகும். கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களின் சுற்றுலா காட்சி அற்புதமாக இருக்கும். நமக்கு குட்நைத் பேட்சஸ் நாள் முழுவதும் பாதுகாபாக இருக்கும். இதை போட்டுக் கொள்வதும் சுலபம். எனவே இது பயணத்திற்கு மிகவும் ஏற்றது. பெற்றோர்கள் மாற்றி மாறி குழந்தைகளை விளையாட அழைத்து அவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நேரத்தை தர முடியும். இதன் மூலம் போரடிக்காமல் இருக்க முடியும். மேலும் உங்கள் குழந்தைகள் மற்ற இடங்களில் சென்று விளையாடும்போது உங்களுக்காகவும் நேரம் கிடைக்கும்.
5. அவர்களை இஷ்டப்படி இருக்க விடுங்கள்.
பெற்றோர்கள் ஆகிய நாம் மிகவும் பயப்படுகிறோம். பதட்டப்படுகிறோம், மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம். ஏனென்றால் ஒரு காலத்தில் இருந்த பாதுகாப்பு இப்போது இல்லை. நாம் அந்தக் காலத்தில் மழையில் நனைந்து அல்லது குட்டைகளில் குதித்து விளையாடியதைப் போல இந்த கால குழந்தைகள் செய்யாமல் பார்த்துக் கொள்கிறோம். ஆனால் அவர்களை அப்படி இருக்க விடவேண்டும் என்பது எனது கருத்து. இவ்வாறான விளையாட்டு இல்லாத பிள்ளைப் பருவம் ஒரு பிள்ளைப் பருவமே இல்லை. கொஞ்சம் அதிகமாக அழுக்குத் துணிகளை துவைக்க வேண்டி இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் நல்ல ஞாபகார்த்தங்கள் விளையாட்டின் மூலம் உருவாக்கப்படும். உண்மையை சொன்னால் நானும் என் மகனுடன் சேர்ந்து குட்டையில் குதித்து விளையாடி எனது பிள்லைப் பருவத்தை ஞாபகப்படுத்திக் கொள்வேன்.