X
இப்கபாது வாங்கவும்
Know About Diseases July 25, 2019

உங்கள் குழந்தைகளை டெங்குவிலிருந்து பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய 5 வழிமுறைகள்

உலக சுகாதாரக் அமைப்பின்படி டெங்கு  உலகில் அதிகரித்து வருகிறது. உலகெங்கும் 39 கோடி மக்கள் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஏடெஸ் வகை கொசுக்கள் கடிப்பதால் டெங்கு ஏற்படுகிறது.

 

உங்கள் குடும்பத்தை டெங்குவைப் பரப்பும் கொசுக்களிடமிருந்து பாதுகாப்பதற்காக நீங்கள் மேற்கொள்ள வேண்டிய 5 வழிகள்.

 

தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்துங்கள்.

நமது வீட்டை சுற்றி தேங்கி இருக்கும் சுத்தமான தண்ணீரில் டெங்கு மற்‘றும் சிக்கன் குனியாவைப் பரப்பும் கொசுக்கள் சுலபமாக இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே முதல் வேலையாக தண்ணீர் சேறும் இடங்களிலிருந்து தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப் படுத்த வேண்டும்.  குழந்தைகள் விளையாடும் அக்கம்பக்கத்து இடங்கள், பார்க்குகள்,மைதானங்களில்  தண்ணீர் குட்டைகள், செயற்கை ஊற்று, பறவை குளிக்கும் இடங்களில் தண்ணீர் சேர்ந்திருக்கிறதா என்று எப்போதும் கவனிக்கவும்.  நீங்கள் இவ்வாற இடங்களில் இருக்கும் தண்ணிரை இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.  உங்கள் வீட்டில் குழந்தைகளுக்கான காற்றடைத்த நீச்சல் குளம் இருந்தால், குழந்தைகள் அதில் நீச்சலடித்த பிறகு ஒவ்வொரு முறையும் அவற்றிலுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தி விடவும். பிறகு அதை கவிழ்த்து வைக்கவும்.  இதன் மூலம் அதில் தண்ணீர் சேராமல் தடுக்க முடியும்.

 

 

வீட்டில் தண்ணீர் வைக்கும் பாத்திரங்கள் திறந்திருந்தால் அவற்றைக் கண்காணிக்கவும்.  பூத்தொட்டியின் அடியிலுள்ள தட்டுக்கள், பூச்சாடிகள், ஏசி மற்றும் பிரிட்ஜ் டிரேக்கள் போன்றவை மூடப்பட்டு இருக்க வேண்டும்.  மூன்று நாட்களுக்கு ஒரு முறை அவற்றில் இருகும் தண்ணீர் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.  டெங்கு பரப்பும் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் எவை என்று அறிய இங்கு காணவும்.

 

அடிக்கடி புகை போடவும்

பெரும்பாலும் வசிப்பிட வளாகங்கள் அனைத்திலும், அவற்றை சுற்றி அடிக்கடி புகை போடுகிறார்கள். நீங்கள் வசிக்கும் வளாகத்தில் அவ்வாறு செய்யப்படவில்லை என்றால்,  உங்கள் கமிட்டியிடம் அடிக்கடி புகை போட வேண்டும் என்று பரிந்துரைக்கவும்.   உங்கள் உள்ளூர் நகராட்சிடம் டெங்கு கொசுக்களின் புழுக்கள் இருக்கின்றனவா என்று பார்க்க உங்கள் வசிப்பிடத்தை பார்வையிடச் சொல்ல்வும்.  அவர்கள் அடிக்கடி புகைபோடும் பழக்கத்தை ஏற்படுத்தவும் உதவி செய்வார்கள்.

 

 

பாதுகாப்பான உடை அணியவும்.

நீளமான கை இருக்கும் உடையை அணியவும். கொசுக்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு உடல் அதிகம் வெளியில் தெரியாத அளவு  உடைகளை அணியவும். கொசுக்கள் இறுக்கமான சிந்தெடிக் உடைக்குள்ளும் கடிக்கும் தன்மை கொண்டவை. எனவே குழந்தைகளுக்கு உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளுக்கு பதிலாக சௌகரியமான உடைகளை அணிவிக்கவும்.

 

வீட்டிற்கு வெளியில் செல்லும்போது கொசு விரட்டிகளைப் பயன்படுத்தவும்.

உங்கள் குழந்தைகள் வீட்டிற்கு வெளியில் செல்லும்போது, கொசு விரட்டிகள் அல்லது சுய பாதுகாப்பு விரட்டிகளை பயன்படுத்தவும்.  இந்த விரட்டிகள் பல வடிவங்களில் கிடைக்கின்றன. அதாவது க்ரீம்கள், ஆயில்கள், பேட்சுகள், ஜெல்கள் மற்றும் புதிதாக அறிமுகப்படுதப்பட்டுள்ள ஃபேப்ரிக் ரோல்–ஆன்.

 

நீங்கள் குட்நைட் ஃபேப்ரிக் ரோல்–ஆன் பயன்படுத்தலாம். இது தூய்மையான சிட்ரோனெல்லா மற்றும் யூகலிப்டஸ் ஆயில்களால் தயாரிக்கப்பட்டவை. இதை உங்கள் உடையில் 4 புள்ளிகள் வைத்துக் கொள்ளுங்கள். இது 100% இயற்கையான பாதுகாப்பை உறுதி செய்கிறது. நீங்கள் குட்நைட் பேட்சுகளையும் பயன்படுத்தலாம். இவற்றை உங்கள் குழந்தையின் உடையில் போடலாம். இது 8 மணி நேரம் வரை பாதுகாப்புத் தருகிறது.

 

 

உங்கள் தோட்டங்களில் கொசு விரட்டி செடிகளை வைத்திருங்கள்.

 

லெமன் கிராஸ் போன்ற சில தாவரங்கள் கொசுக்களை விரட்டும் தன்மை கொண்டவை என்று அறியப்பட்டவை. உங்கள் தோட்டத்தில் விருந்து கொடுக்கும்போது, இந்த செடிகள் அழகான தோற்றம் கொண்டவையாகவும் இருக்கின்றன.   இவற்றிற்கான பராமரிப்பும் குறைவும். இவற்றை உங்கள் தோட்டத்தில் நடுங்கள். இவை கொசுக்கள் அதிகம் இருக்கும் காலத்தில் உதவியாக இல்லாவிட்டாலும்கூட, கொசுக்களை ஓரளவிற்கு விலக்கி வைக்கும்.

 

 

சிட்ரோனெல்லா, துளசி, கேத்னிப் போன்ற இதர தாவரங்களுக்கும் கொசுக்களை விலக்கும் தன்மை இருக்கிறது.  டெங்கு என்று வரும்போது இந்த சிறிய நடவடிக்கைகள் பெரும் பலனைத் தரக்கூடியவை.  உங்கள் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இதற்காக படிக்கவும்: டெங்குவை எடுத்துக் காட்டும் அறிகுறிகள் என்ன? அவற்றிலிருந்து  உங்களைப் பாதுகாக்கும் சில முறைகள் இதோ.

 

Related Articles

குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் – தடுப்பது, அறிகுறிகள் மற்றும் சிகிச்சை.

Read More
சிட்ரன்னா எண்ணெய்கள் மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய்கள் - 100% இயற்கை கொசுக்கள் விலகல்

இயற்கையான கொசு விரட்டிகளை புரிந்துகொள்ளுதல் – சிட்ரோனெல்லா மற்றும் யூகலிப்டஸ் ஆயில்

Read More

உங்கள் குழந்தையை டெங்கு மற்றும் சிக்கன்குனியாவிலிருந்து பாதுகாப்பதற்கான 4 குறிப்புகள்

Read More

இந்தியாவில் மழைக்காலதில் மலேரியா மற்றும் டெங்கு நோய்கள் அதிகரிக்கின்றன.

Read More

மலேரியாவின் அறிகுறிகளைத் தெரிந்து கொண்டு, இரவு நேர கொலைகார கொசுக்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Read More

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளையும் அடையாளங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Read More

Find The Right Repellent

Find Your Protector