X
இப்கபாது வாங்கவும்
Mommy Zone July 25, 2019

குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆனை பயன்படுத்த நினைவு வைத்துக்கொள்வதற்கு சுவாரசியமான வழிகள்.

பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தமது குழந்தைகளை கொசுக்களிடமிருந்து பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்; அவர்களை வீட்டிற்குள் பாதுகாப்பாகவும் வைப்பதற்கு அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்.  குழந்தை  நிம்மதியாக தூங்குவதற்கு விசேஷ முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.   டெங்கு, சிக்கன்குனியா மற்றும் இதர நோய்களைப் பரப்பும் கொசுக்கள் பகலில்தான் சுறுசுறுப்பாக இயங்குகின்றன என்பது பெரும்பாலான பெற்றோர்களுக்குத் தெரியாது.

 

பகல் வேளையில் குழந்தைகள் பெரும்பாலும் வீட்டிற்கு வெளியில்தான் இருக்கிறார்கள். எனவேதான் ஃபேப்ரிக் ரோல் ஆனை குட்நைட் அறிமுகப்படுத்தியுள்ளது.  இது வீட்டிற்கு வெளியில் கொசுக்களுக்கு எதிராக பாதுகாப்புத் தருகிறது. இந்த தயாரிப்பை பயன்படுத்துவது சுலபம்.  ஆனால் பல நேரங்களில் பிசியாக  இருப்பதால், நீங்கள் முக்கியமான விஷயங்களை பெரும்பாலும் மறந்துவிடுகிறீர்கள்.  நீங்கள் அனைவரும் கொசுக்களிடமிருந்தும், கொசுக்களினால் பரவும் நோய்களிடமிருந்தும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று குட்நைட் விரும்புகிறது.

 

குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன் பயன்படுத்துவதை நினைவு வைத்துக்கொள்ள சில வழிகள் பின்னே கொடுக்கப்பட்டுள்ளன.

 

கீ செயின்கள் மற்றும் கீ ஹோல்டர்கள்:

பொதுவாக மக்கள் தமது வீட்டு சாவி அல்லது கார் சாவியை கொண்ட செயின்களை வீட்டு கதவிற்கு அருகில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்திருப்பார்கள். வீட்டை விட்டு செல்லும்போது, இந்த இடங்கள்இல் இருக்கும் சாவியை நீங்கள் மறக்காமல் எடுத்துச் செல்கிறீர்கள். அதே போல சாவியை மாட்டும் இந்த இடங்களில் உள்ள கீ ஹோல்டரில் நீங்கள் குட்நைட் ஃபேப்ரிக்  ரோல்–ஆனை  வைத்திருக்கலாம்.  எனவே நீங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போதெல்லாம் இதைப் பயன்படுத்துவது பற்றி  நினைவு வைத்திருக்க முடியும்.

 

 

ஸ்கூல் பேக் மற்றும் ஹேண்ட் பேக்:

குழந்தைகள் ஸ்கூல் பேகை எடுத்துக் கொள்ளாமல் ஸ்கூலிற்கு போ மாட்டார்கள்.  அதே போல தாய்மார்களும் ஹேண்ட் பேக் இல்லாமல் வெளியில் போக மாட்டார்கள். எனவே நீங்கள் வெளியில் செல்லும் ஒவ்வொரு முறையும் கொசுகளிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆனை உங்கள் பேகுடன் இணைத்து வைத்திருக்கவும்.  இதன் மூலம் இதை பயன்படுத்துவதற்கு நினைவு வைத்துக் கொண்டு கொசுக்கடியிலிருந்து தப்பிக்கலாம்.

 

யூனிஃபார்ம் ஹேங்கரில் கோர்த்து வைக்கவும்:

ஸ்கூல் யூனிஃபார்மை துவைத்து, அயன் செய்து, உங்கள் குழந்தை அதைப் போட்டுக்கொள்ள தயாராக ஹேங்கரில் மாட்டி வைக்கிறீர்கள். இதன் மூலம் யூனிஃபார்ம் சுருக்கம் விழாமல் இருக்கும். உங்கள் குழந்தை குட்நைட் ரோல் ஆனை மறக்காமல் பயன்படுத்துவதற்கு வசதியாக அதை ஸ்கூல் யூனிஃபார்ம் ஹேங்கரில் கோர்த்து வைத்தால், குழந்தைகள்  யூனிஃபார்மை போட்டுக் கொண்டதும், அதை மறக்காமல் பயன்படுத்துவார்கள்.

 

பிராம்ஸ் மற்றும் கட்டில்கள்:

சிறு குழந்தைகள் என்று வரும்போது,  குழந்தைகள் மீது எதுவும் போடாமல் அவர்களை கொசுக்களிடமிருந்து பாதுகாக்க முடியும்.  அவர்களின் பிராமில் அல்லது கட்டிலில் 4 புள்ளிகள் குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆனை வைத்தால் போதும்.  இது அவர்களை 8 மணி நேரம் கொசுக்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு உதவும்.  இதை மறக்காமல் பயன்படுத்துவதற்காக அவற்றை பிராம் அல்லது கட்டிலில் தொங்கவிடவும்.

 

வாசல் கதவின் பின்னால்:

உங்கள் வாசல் கதவின் பின்னால் குட்நைட் ஃபேப்ரிக் ரோல்–ஆனைத்  தொங்கவிடுவது மிகவும் நல்லது.  எனவே நீங்கள் கதவை திறக்கும் முன்பு அது நினைவுக்கு வரும். எனவே  வீட்டிற்கு வெளியில் செல்லும் முன்பு அதை பயன்படுத்தி கொசுக்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

 

ட்ரெஸ்ஸரில் வைத்திருக்கவும்.

ஒவ்வொருவரும் வெளியில் செல்வதற்கு முன்பு ட்ரெஸ்ஸரை பயன்படுத்துகிறார்கள். டிரெஸ்ஸரில் உங்கள் சென்ட்/டியோ வைத்திருக்கும் இடத்திற்கு பக்கத்தில் குட்நைட் ஃபேப்ரிக் ரோல்–ஆனைய்ம் வைத்திருக்கவும்.  இதன் மூலம்  நீங்கள் வெளியில் செல்வதற்கு முன்பு இதை பயன்படுத்த வேண்டும் என்ற ஞாபகம் வரும்.

 

படுக்கைகள்

நீங்கள் உங்கள் உடைகளில்  குட்நைட் ஃபேப்ரிக் ரோல்–ஆன் பயன்படுத்த விரும்பவில்லை என்றால்.  உங்கள் படுக்கையின் 4 முனைகளில் இதைப் போடவும். இது கொசு வலை போல செயல்படும். எனவே நீங்கள் கொசுத்தொல்லை இன்றி நிம்மதியாக தூங்க முடியும்.

Related Articles

குழந்தைகளுக்கான இயற்கையான கொசு விரட்டி

Read More

குழந்தைகளுடன் வீட்டிற்குள் விளையாடக்கூடிய 10 விளையாட்டுக்கள்

Read More

பள்ளி செல்லும் சிறுவர்களின் சுகாதாரத்திற்கான புத்திசாலித்தனமான வழிகள்.

Read More

மழைக்காலத்தை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக அனுபவியுங்கள்

Read More

உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் ஆற்றலுள்ள மற்றும் பாதுகாப்பான கொசு விரட்டிகள்.

Read More
Mosquito repellent to prevent disease

Use Mosquito Repellents To Prevent Mosquito-Borne Diseases

Read More

Find The Right Repellent

Find Your Protector