X
இப்கபாது வாங்கவும்
Know About Diseases July 23, 2019

குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் – தடுப்பது, அறிகுறிகள் மற்றும் சிகிச்சை.

கடந்த 5–6 ஆண்டுகளாக இந்தியாவில் டெங்கு அதிகரித்து வருகிறது.  இந்த நோயினால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பதுகிறார்கள்.  ஏனென்றால் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பது மட்டுமின்றி,  டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் பகலில்தான் கடிக்கின்றன. இந்த நேரத்தில் பெரும்பாலும் பெரிவர்கள்  (அலுவலகத்தில் அல்லது  வீட்டில் ) உள்ளே இருப்பார்கள், குழந்தைகள்  பள்ளிக்கூடத்திலோ, விளையாடிக்கொண்டோ, பள்ளிக்கூடத்தில் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டோ இருப்பார்கள்.  அவர்கள் வீட்டிற்கு வந்த உடன் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு, பிறகு மாலை நேரத்தில் விளையாடச் சென்று விடுவார்கள்.

 

எனவே டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்களை, குறிப்பாக குழைந்தைகளிடையே  எவ்வாறு தடுப்பது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.

 

டெங்குவை தடுப்பது, அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு,  டெங்கு பற்றி நீங்கள் அதிக விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

 

இதற்கு முன்பு நாங்கள் குழந்தைகளிடையே டெங்குவை தடுக்கும் 5 வழிகள் பற்றிய கட்டுறையை வெளியிட்டிருந்தோம்.  அதை படித்து தெரிந்து நன்கு கொள்ளுங்கள்.

 

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் டெங்குவைத் தடுப்பதற்கு நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய சிலவற்றை பின்னே கொடுத்துள்ளோம்.

 

  • டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை நீக்கவும் – டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை பற்றி இங்கு படித்து அதிகம் தெரிந்து கொள்ளவும்.
  • கொசுக்கடிகளைத் தவிர்க்கவும்
  • உங்கள் குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியில் செலும்போது அவர்கள் குட்நைட் ஃபேப்ரிக் ரோல்–ஆன் போன்ற கொசு விரட்டிகளை 4 புள்ளிகள் வைத்துக் கொண்டு செல்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்

 

  • நீங்கள் பகல் நேரத்தில் வீட்டில் இருந்தால் குட்நைட் ஆக்டிவ்+ சிஸ்டம் போன்றவற்றை ஆன் செய்து வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  • வானிலை அனுமதித்தால் முழு கையுள்ள சட்டைகளை அணிந்து கொள்ளவும்.

 

குழந்தைகளை டெங்கு காய்ச்சல் எவ்வாறு பாதிக்கிறது?

 

சிலருக்கு டெங்கு வைரல் காய்ச்சல் எந்த அடிகுறிகளும் சொல்லாமல் தொற்றிக்கொள்கிறது.  சிறு குழந்தைகள் மற்றும் சிறுவ சிறுமிகளிடையே இதன் அறிகுறிகள் மிக மிதமாக இருக்கும்.

 

சிறு குழந்தைகள் மற்றும் சிறுவ சிறுமியர்களிடையே டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்.

  • சிறு குழந்தைகள் மற்றும் குழந்தைகளிடையே இது வைரல் ஃப்ளூ போல அதிக காய்ச்ச்சல், மூக்கு ஒழுகல் மற்றும் இருமலுடன் தொடங்கும்.
  • அதோடு அவர்கள் வழக்கத்தைவித அதிகமாக பிடிவாதம் பிடிப்பார்கள், எரிச்சலடைவார்கள், அழுவார்கள்,
  • இவற்றைதவிர, ஈறுகளில் அல்லது மூக்கில் இரத்தக் கசிவு, சருமத்தில் சிரங்குகள், வாந்தி (ஒரு நாளில் மூன்று முறைக்கும் அதிகமாக) போன்ற அறிகுறிகளும் உண்டாகும்.

 

பெரிய குழந்தைகளிடையே டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளில் அடங்கியவை.

  • ஏறி இறங்கும் காய்ச்சல்
  • கண்களுக்குப் பின்னால் வலி
  • தசை மற்றும் மூட்டு வலி
  • தீவிர தலைவலி

 

 

 

 

டெங்கு தொற்றுள்ள ஏடெஸ் கொசு கடித்த பிறகு பெரும்பாலும் 8–10 நாட்களில் இந்த அறிகுறிகள் தோன்றும். இந்தகால கட்டத்தில் குழந்தைகளுக்கு பின் வரும் அறிகுறிகள் ஏற்படக்கூடும்

  • பசியின்மை
  • குமட்டல் அல்லது வாந்தி

 

உங்கள் குழந்தைக்கு டெங்கு இருப்பதாக சந்தேகித்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

 

உடனே குழந்தை நல மருத்துவரிடமோ அல்லது பொது மருத்துவரிடமோ காட்ட வேண்டும்.  பெரும்பாலான டாக்டர்கள் டெங்கு வைரஸ் இருக்கிறதா என்பதைக் கண்டறிய இரத்தப் பரிசோதனை செய்யச் சொல்வார்கள். பொதுவாக டெங்குவிற்கு குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை என்பதால், அது தானாகவே போய்விடும்.  ஆனால் தீவிர நிலைகளில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படலாம்.

 

பின் வரும் முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்கவும்:

  • குழந்தைக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் கொடுக்கவும்
  • காய்ச்சலை குறைக்க நெற்றியில் ஈர துணியை போடவும்
  • குழந்தை வெதுவெதுப்பான திரவங்கள் அதிகம் குடிப்பதை உறுதி செய்யவும்.
  • பப்பாளி ஜூஸ் உதவு செய்யலாம். அதைஎவ்வளவு கொடுக்க வேண்டும் என்று உங்கள் மருத்துவரைக் கேட்டு அறியவும்.
  • உங்கள் குழந்தைக்கு எலெக்ட்ரோலைட்/ஓஆர்எஸ் பவுடர் கொடுத்து நீர்ச்சத்து வற்றுவதை தடுக்கவும்.
  • உங்கள் குழந்தை அதிக ஓய்வு எடுப்பதை உறுதி செய்து கொள்ளவும். விளையாட்டு, டிவி பார்த்தல், ஐபேடு பயன்படுத்துதல் போன்றவற்றை தவிர்க்கவும்.
  • உங்கள் குழந்தைக்கு கதை சொல்லுதல் மற்றும் அவர்களுக்காக பாடுதல் போன்றவற்றை செய்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்லவும்
  • போர்டு கேம்கள் விளையாடுவது அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள மற்றுமோர் வழி.
  • உங்கள் குழந்தை குணமடைந்து வரும் காலத்தில் அறையில் கொசு விரட்டியை ஆன் செய்து வைக்கவும்.

 

Related Articles

உங்கள் குழந்தைகளை டெங்குவிலிருந்து பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய 5 வழிமுறைகள்

Read More
சிட்ரன்னா எண்ணெய்கள் மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய்கள் - 100% இயற்கை கொசுக்கள் விலகல்

இயற்கையான கொசு விரட்டிகளை புரிந்துகொள்ளுதல் – சிட்ரோனெல்லா மற்றும் யூகலிப்டஸ் ஆயில்

Read More

உங்கள் குழந்தையை டெங்கு மற்றும் சிக்கன்குனியாவிலிருந்து பாதுகாப்பதற்கான 4 குறிப்புகள்

Read More

இந்தியாவில் மழைக்காலதில் மலேரியா மற்றும் டெங்கு நோய்கள் அதிகரிக்கின்றன.

Read More

மலேரியாவின் அறிகுறிகளைத் தெரிந்து கொண்டு, இரவு நேர கொலைகார கொசுக்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Read More

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளையும் அடையாளங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Read More

Find The Right Repellent

Find Your Protector