பகலோ இரவோ எப்போது பார்த்தாலும் காதுக்கு அருகில் கொசு ரீங்காரம் செய்வதைப் போன்ற தொல்லை வேறு எதுவும் இல்லை. அதுமட்டுமல்ல, அது கடித்தால் சருமத்தில் புதிதாக சிவப்பு ரேஷ் உருவாகிறது. இந்த தொல்லை தரும் கொசுக்கள் நமக்கு வெறுப்பு ஏற்படுத்துவது மட்டுமின்றி, அவை அபாயகரமாகவும் இருக்கின்றன. அதாவது இவை டெங்கு மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன. மேலும் மலேரியா, ஜப்பானீஸ் என்செஃபலைட்டிஸ் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற இதர நோய்களையும் ஏற்படுத்துகின்றன.
இந்த கொசுக்களை எப்படி ஒழிப்பது என்பது பற்றி இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
1. வீட்டிற்குள் நாள் முழுவதும் கொசு விரட்டி பயன்படுத்துங்கள்.
இது மிகவும் முக்கியமானது, ஏடெஸ் எஜிப்டி கொசுதான் டெங்கு மற்றும் சிக்கன்குனியாவைப் பரப்புகின்றது. இது பொதுவாக பகல் நேரத்தில்தான் கடிக்கும் எனவே நாள் முழுவதும் கொசு விரட்டியை ஆன் செய்து வைக்க வேண்டியது முக்கியம்.
கடைகளில் ரசாயன அடிப்படையிலான பல கொசு விரட்டிகள் கிடைக்கின்றன. நீங்கள் TFT அடிப்படையிலான கொசு விரட்டிகளை பயன்ன்படுத்தலாம். இவை வீட்டிற்குள் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானவை. குட்நைட் கொசு விரட்டிகளில் தீவிர மூலப் பொருளாக TFT இருக்கிறது. இது பல கடுமையான பரிசோதனைகளுக்கும், தரக்கட்டுப்பாட்டிற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது.
2. நீங்கள் வீட்டிற்கு வெளியில் செல்லும் ஒவ்வொரு முறையும் கொசு விரட்டி பயன்படுத்தவும்
நீங்கள் வீட்டிற்கு வெளியில் செல்லும் ஒவ்வொரு முறையும் குட்நைட் ஃபேப்ரிக் ரோல்–ஆன் பயன்படுத்துவதை பழக்கமாக்கிக் கொள்ளவும். நீங்கள் உங்கள் உடையில் 4 புள்ளிகள் வைத்துக் கொண்டால் போதும் நீங்கள் வீட்டிற்கு வெளியில் கொசுக்களிடமிருந்து 8 மணி நேரம் பாதுகாப்பாக இருக்கலாம்.
3. உங்கள் வீட்டில் கொசுக்கள் இன்பெருக்கம் செய்ய இடமளிக்காதீர்கள்.
4. உங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஜன்னல் திரைகள் மற்றும் கொசுவலை போன்றவற்றை பயன்பதுத்தலாம்.