X
இப்கபாது வாங்கவும்
Know About Diseases May 28, 2019

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளையும் அடையாளங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

வெயில் காலத்தின் ஆரம்பத்தில், நாம் அபாயகரமான நோய்கள் அனைத்தையும் தடுப்பதற்கான முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும்.  அதிலும் குறிப்பாக கொசுக்களினால் ஏற்படும் நோய்கள்.  இவற்றில் சிக்கன்குனியா உயிர்க்கொல்லி நோய் இல்லை என்றாலும் டெங்கு சமீபத்தில் நிச்சியமாக பலரின் உயிரைக் குடித்துள்ளது.

 

டெங்கு காய்ச்சல் முதல் முதலாக 1789 ஆம் ஆண்டு பி. ரஷ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அது பற்றிய சில உண்மைகள்:

 

  • சீனாவில் கி.பி.420ல் இந்த காய்ச்சல் பறக்கும் பூச்சிகளால் பரவும் வைரஸ் என்று சொன்னார்கள்.
  • ஆப்ரிக்க மக்கள் இந்த வைரஸை ‘கா டிங்கா பெப்போ‘  என்று சொன்னார்கள், அதாவது ஆவிகளின்
  • நோய்.ஸ்பெயின் நாட்டு மக்கள் ‘டிங்கா‘ என்று சொனார்கள். இதற்கு ஸ்பானிய மொழியில் ஜாக்கிரதை என்று அர்த்தம்.

 

டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதற்கு என்ன காரணம்?

 

  • நகர்ப்புற மற்றும் பெருநகரப் பகுதிகள் வர்த்தகமயமானது இப்போது கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய வசதியாக உள்ளது.
  • சுற்றுச்சூழல் மாற்றங்கள்
  • முன்னர் இந்த நோய்க்கு ஆளான வெளிநாட்டுக்காரர்கள் நம் நாட்டிற்கு சுற்றுலா பயணியாக வருதல்.

 

டெங்குவின் ஆரம்ப அறிகுறிகள்:

 

டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் ஒரே மாதிரிதான் இருக்கும். எனவே இந்த இரண்டு வைரஸ்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் மக்கள் குழம்புவார்கள்.  டெங்கு காய்ச்சலின்  சில ஆரம்ப அறிகுறிகள்.

 

  • சில சமயம் காய்ச்சல் 104 டிகிரி ஃபாரென்ஹீட்டை எட்டும்
  • மூட்டு மற்றும் தசைவலி
  • சருமத்தில் ரேஷ்கள்
  • கன்ஜெக்டிவிடீஸ்
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • சோர்வு
  • ஓய்வின்மை

 

நோயைக் கண்டறிதல்

 

  • டெங்குவின் ஆரம்ப அறிகுறிகளுக்கு முதலில் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.
  • நோய் இருப்பது கண்டறியப்பட்டால், அதை உடனே மருத்துவரிடம் காட்டி, உரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

 

 சிக்கல்கள்

 

  • இரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து இதனால் மூளையில் இரத்தக் கசிவு ஏற்படலாம்.
  • வைரஸ் மோசமாக தாக்கி இருந்தால் அது நுரையீரல் மற்றும் இதயத்தை பாதிக்கலாம்.

 

தடுத்தல்

 

உளகெங்கும் மருத்துவர்கள் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள்.   பிறகு இதற்காக டெங்வாக்ஸியா என்ற மருந்து சமீபத்தில் ஓப்புக் கொள்ளப்பட்டது. இருந்தாலும் இது 9 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே. இருந்தாலும், இந்த மருந்து அந்த நோயை முழுமையாக குணப்படுத்துமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்று   உலக சுகாதார அமைப்பு கூறுகின்றன.  இந்த நோயைத் தடுத்து வரும் முன் காப்பதே சிகிச்சியைவிட மேலானது.  சுற்றுச் சூழல்களில் மாற்றத்தை எற்படுத்துவதன் மூலம் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதை குறைக்க முடியும்.  அதிக கொசுக்கள் இருக்கும் இடத்திற்கு செல்லாமல் தவிர்ப்பது மிகவும் சிறந்தது.

 

தினசரி முன்னெச்சரிக்கைகள்:

 

  • எப்போது வீட்டிற்குள் இருக்க வேண்டும், எப்போது வெளியில் செல்ல வேண்டும் என்று அறியுங்கள்:  பெண்கொசுக்கள்தான் டெங்கு வைரஸ்களை பரப்புகின்றன. இவை காலை முதல் மாலை வரை செயல்படுகின்றன. இருப்பிலும் அவை இரவில் செயல்படுவதற்கு தடை எதுவும் இல்லை.   நீங்கள் குட்நைட் ஃபாஸ்ட் கார்டு பயன்படுத்தி எப்போதும் பாதுகாப்பாக இருங்கள். இது கொசுக்களை விரட்ட உதவும்.
  • பாதுகாப்பான உடைகளை அணியுங்கள்: கொசுக்கள் இருக்கு பகுதிக்கு செல்லும்போது உடலை முழுமையாக மறைக்கும் உடைகளை அணிந்து செல்லுங்கள். விருந்து அல்லது விளையாட போகும்போது, உங்கள் உடையில், குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆனை 4 புள்ள்இகள் வைத்து கொசுக்களை விரட்டுங்கள்.
  • உங்கள் வீட்டு சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருங்கள்:  வீட்டிற்கு அக்கம்பக்கத்தில் தண்ணீர் தேங்கி இருந்தால், அவற்றை உடனே நீக்கி அப்புறப்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் வீட்டிற்கு அருகில் கொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதை தவிர்க்க முடியும்.  கொள்கலன்கள், பூஜாடிகள், கால்நடை பாத்திரங்கள் போன்றவற்றில் இருகும் தண்ணீரை தினமும் நீக்க வேண்டும்.

 

 

Related Articles

உங்கள் குழந்தைகளை டெங்குவிலிருந்து பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய 5 வழிமுறைகள்

Read More

குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் – தடுப்பது, அறிகுறிகள் மற்றும் சிகிச்சை.

Read More
சிட்ரன்னா எண்ணெய்கள் மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய்கள் - 100% இயற்கை கொசுக்கள் விலகல்

இயற்கையான கொசு விரட்டிகளை புரிந்துகொள்ளுதல் – சிட்ரோனெல்லா மற்றும் யூகலிப்டஸ் ஆயில்

Read More

உங்கள் குழந்தையை டெங்கு மற்றும் சிக்கன்குனியாவிலிருந்து பாதுகாப்பதற்கான 4 குறிப்புகள்

Read More

இந்தியாவில் மழைக்காலதில் மலேரியா மற்றும் டெங்கு நோய்கள் அதிகரிக்கின்றன.

Read More

மலேரியாவின் அறிகுறிகளைத் தெரிந்து கொண்டு, இரவு நேர கொலைகார கொசுக்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Read More

Find The Right Repellent

Find Your Protector