X
இப்கபாது வாங்கவும்
Know About Diseases April 8, 2019

மலேரியா

மலேரியா என்றால் என்ன?

மலேரியா என்பது கொசுக்களினால் பரவும் நோய். இது பிளாஸ்மோடியம் பராசைட்டினால் ஏற்படுகிறது. இந்த பாராசைட்டை ஆனோஃபெலஸ் கொசுக்கள் பரப்புகின்றன. 2015 ஆம் ஆண்ண்டு மலேரியாவால் 21 கோடியே 40 லட்சம் பேர் பாதிகப்பட்டனர். இதில் 438000 பேர் மலேரியாவல் உயிரிழந்தனர்.

 

மலேரியாவின் அறிகுறிகள் என்ன?

இது ஃப்ளூ போன்ற நோய் ஆகும். இது அதிக காய்ச்சல் மற்றும் குளிருட்அன் ஆரம்பிக்கும். இதன் இதர அறிகுறிகளில் வாந்தி, குமட்டல், தலைவலி, உடல் வலி, பலவீனம் மற்றும் சோர்வு போன்றவை அடங்கும்.

 

மலேரியாவிற்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது? இதற்கான தடுப்பு மருந்துகள் இருக்கின்றனவா?

மலேரியாவிற்கு சிகிச்சை அளிக்க ஆன்டிமலேரியல் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. குறிப்பாக ஆடெமிஸ்னின் சேர்ந்த சிகிச்சை (ஏசிடி). வயது, மலேரியாவின் வகை, கருத்தரித்துள்ள பெண்கள் போன்ற பல காரணிகளுக்கு ஏற்ப மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.  மலேரியா போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

 

இன்று மலேரியாவிற்கு வர்த்தக ரீதியான தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை. ஆனால் உலகளவில் பல நிறுவனங்கள் மலேரியாவிற்கு எதிராக தடுப்பு மருந்தை உருவாக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

 

ஒருவருக்கு மலேரியா இருக்கிறது என்று எப்படி கண்டறிவது?/மலேரியாவைக் கண்டறியும் பரிசோதனைகள் என்ன?

ரேபிட் டயக்னோஸ்டிக் டெஸ்ட் (ஆடிடி) என்ற பரிசோதனையின்  மூலம் அல்லது மைக்ரோஸ்கோபி (பரிசானைக்கூட பரிசோதனை) மலேரியாவைக் கண்டறியலாம்.  நோயாளியின் ஒரு சொட்டு இரத்த்த்தில் மலேரியா பாராசைட் இருக்கிறதா என்பதை கண்டறியும் பரிசோதனை ஆகும்.  மலேரியா நோயை ஆற்றலுடன் கட்டுப்படுத்துவதற்காக ஆஷா பணியாளர்களும், ஆரம்ப சுகாதார மையங்களும் ஆடிடியை பயன்படுத்துகிறார்கள்.  அதிலும் குறிப்பாக போதுமான மருத்துவ வசதிகள் இல்லாத தொலை தூர இடங்களில். மலேரியா அதிகம் இல்லாத இடங்களில் நியூக்ளிக் ஆம்ப்ளிஃபிகேஷன் அடிப்படையிலான பரிசோதனையும் கிடைக்கிறது.

 

மலேரியாவை தடுக்க முடியுமா?

மலேரியா நோய் ஆனோஃபெல்ஸ் கொசு மூலம் பரவுகிறது. எனவே வீட்டிற்கு உள்ளேயும் வெளியிலும்  இந்த கொசுக்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம்.  ஏனென்றால் ஒரு முறை கொசு கடித்தால்கூட மலேரியா நோய் வரக்கூடும். வீட்டிலிருந்து வெளியில் செல்வதற்கு முன்பு குட்நைட் ஃபேப்ரிக் ரோல் ஆன் (அல்லது குட்நைட் கூல் ஜெல்/குட்நைட் பேச்சஸ் போன்றவை) போன்ற கொசு விரட்டிகளை பயன்படுத்தி கொசுக்கடியைத் தடுக்கவும். வீட்டில் இருக்கும்போது மாலை நேரத்தில் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி வைக்கவும். மேலும் குட்நைட் ஆக்டிவ்+ மற்றும் குட்நைட் ஃபாஸ்ட் கார்டு போன்ற வீட்டு உபயோக கொசு விரட்டிகளைப் பயன்படுத்தி கொசுக்கள் வராமல் தடுக்கவும்.  மேலும் பாதுகாப்பிற்கு கொசு வலைக்குள் படுத்து தூங்கவும்ம்.

 

மலேரியா பற்றி மேலும் விவரங்கள் எங்கே கிடைக்கும்?

உலக சுகாதாரக் கழகத்தின் (டபிள்யூஎச்ஓ)  சென்டர் ஃபார் டிஸீஸ் கன்ட்ரோல் (சிடிசி) மற்றும் நேஷனல் வெக்டர் போர்ன் டிஸீஸ் கன்ட்ரோல் புரோக்கிராம் ஆஃப் இந்தியா (என்விபிடிசிபி) போன்றவற்றின் இணையதளங்கள் மலேரியா மற்றும் அதன் அறிகுறிகள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட விவரங்களைத் தரும்.

 

தயவுசெய்து உள்ளூர் மருத்துவர், சுகாதார மருத்துவ நிலையம், அல்லது சுகாதார சேவை வழங்குநர்கள் ஆகியோரைக் கலந்து ஆலோசிக்கவும்.

Related Articles

உங்கள் குழந்தைகளை டெங்குவிலிருந்து பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய 5 வழிமுறைகள்

Read More

குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் – தடுப்பது, அறிகுறிகள் மற்றும் சிகிச்சை.

Read More
சிட்ரன்னா எண்ணெய்கள் மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய்கள் - 100% இயற்கை கொசுக்கள் விலகல்

இயற்கையான கொசு விரட்டிகளை புரிந்துகொள்ளுதல் – சிட்ரோனெல்லா மற்றும் யூகலிப்டஸ் ஆயில்

Read More

உங்கள் குழந்தையை டெங்கு மற்றும் சிக்கன்குனியாவிலிருந்து பாதுகாப்பதற்கான 4 குறிப்புகள்

Read More

இந்தியாவில் மழைக்காலதில் மலேரியா மற்றும் டெங்கு நோய்கள் அதிகரிக்கின்றன.

Read More

மலேரியாவின் அறிகுறிகளைத் தெரிந்து கொண்டு, இரவு நேர கொலைகார கொசுக்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Read More

Find The Right Repellent

Find Your Protector