ஆமாம், எல்லா கொசுக்களும் வித்தியாசமாக நடந்துக் கொள்கின்றன, இந்தியாவில் காணப்படும் சில பொது வகை கொசுக்களின் நடத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அடிடீஸ் கொசுவின் இரு இனங்களான அடிசீஸ் எய்க்யப்டி மற்றும் அடிடீஸ் அல்போபிக்டஸ் டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களுக்கு முக்கிய வெக்டராக உள்ளன.
அடிடீஸ் கொசுக்கள் சூரிய ஒளி வீசும் (பகல் நேரம்) நேரத்தில் கடிப்பதை விரும்புகின்றன, அதில் அதிகபட்சமாக கடிக்கும் நேரம் வழக்கமாக விடிகாலை மற்றும் மதிய இறுதியிலிருந்து ஆரம்ப மாலை நேரம் வரை. சுத்தமான நிலையான நீர் கொள்கலன்களில் இனப்பெருக்கம் செய்வதை அவை விரும்புகின்றன. பொதுவாக இவை நகர்புற சூழலில், மனிதர்கள் வாழும் இடத்தில் காணப்படுகின்றன. இவை இனப்பெருக்கம் செய்யும் பொதுவான இடங்கள் ஃப்ரிட்ஜ் ட்ரேக்கள், செடிகள் உள்ள தொட்டிகள், ஏசி டக்டுகள், திறந்த தொட்டிகள் மற்றும் நீர் சேமிக்கும் கொள்கலன்கள்.