Q3. டெங்குவுக்கு என்ன சிகிச்சை இருக்கிறது? இதற்கு தடுப்பு மருந்துகள் இருக்கிறதா?+
டெங்குவிற்கு குறிப்பிட்ட சிகிச்சைகள் எதுவும் இல்லை. அறிகுறிகளை திறமையாக கட்டுப்படுத்துவதே முக்கியம். அதிலும் குறிப்பாக உடல் திரவங்களை போதுமான அளவில் பரமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
டெங்குவிற்கு எதிராக வர்த்தகரீதியான தடுப்பு மருந்து இருக்கிறது. இது மெக்ஸிகோ, பிரேஸில், எல் சல்வடார் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் கிடைக்கிறது. இந்த தடுப்பு மருந்தை உலகளவில் பயன்படுத்தும் முடிவை இன்னும் உலக சுகாதார நிறுவனம் எடுக்கவில்லை. ஆனால் இந்த நோய் பரவும் நாடுகள் தேசிய நோய் எதிர்ப்பு திட்டங்களில் இதை பயன்படுத்த வேண்டும் என்று அது பரிந்துரைக்கிறது. இந்த நோய்க்கான பலவிதமான தடுப்பு மருந்துகள் தற்போது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இருகின்றன என்றாலும், ஒருவர் கொசுக்கடியையும், டெங்குவையும் தடுக்க போதுமான முன்னெச்சரிக்கைகளையும் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.