Q9. டெங்குவிற்கான சிகிச்சை என்ன? அதற்கு தடுப்பு மருந்து எதுவும் உள்ளதா?+
டெங்குவிற்கென்று குறிப்பாக எந்த சிகிச்சையும் இல்லை, அறிகுறிகளை சரியான முறையில் கட்டுப்படுத்துவது முக்கியம், குறிப்பாக உடல் திரவங்கள் போதுமான அளவில் பராமரிக்கப்பட வேண்டும். வர்த்தகரீதியாக டெங்குவிற்கு எதிராக மருந்து கிடைக்கிறது, அது மெக்ஸிகோ, பிரேசில், எல் சேல்வடார், மற்றும் பிலிப்பைன்ஸில் கிடைக்கிறது. உலக அளவில் தடுப்பு மருந்தை பயன்படுத்த WHO அதிகாரபூர்வமான நிலையை தெரிவிக்கவில்லை, ஆனால், நோய் பரவக் கூடிய நாடுகள் தங்கள் தேசிய நோய் தடுப்புத் திட்டங்களில் தடுப்பு மருந்தை பயன்படுத்தலாம் என்று பரிந்துரைந்துள்ளது.. உலகம் முழுவதும் பல பேரிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டாலும், கொசுக்கடியிலிருந்தும், டெங்குவுக்கும் எதிராக போதுமான பாதுகாப்பை ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டும்.